சித்தர்கள் யார்? அவர்களை காண்பது எப்படி?
முதல் சித்தன் சிவன்
“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.
“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16
“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17
“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18
“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19
“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20
“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21
“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22
“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23
“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24
“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25
என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.
சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
சித்தர்கள் பற்றிய தகவல்கள்
சித்தர்கள் எண்ணிக்கை
சித்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளோ ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுவுமே காணக்கூடியதாக இல்லை. இந்நிலையில் சித்தர்கள் எத்தனைபேர்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் 59 சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பதினெண் சித்தர்கள்
தில்லையில் திருமூலர்,
அழகர் மலையில் இராமதேவர்,
அனந்த சயனத்தில் கும்ப முனி,
அருணையில் இடைக்காடர்,
வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,
எட்டுக்குடியில் வான்மீகர்,
மருதாசலத்தில் பாம்பாட்டி,
மாயுரத்தில் குதம்பை,
ஆருரில் கமல முனி,
பழநியில் போகர்,
பரன்குன்றில் குதம்பை,
திருப்பதியில் கொங்கணர்,
இராமேசுரத்தில் பதஞ்சலி,
காசியில் நந்தி,
கருவூரில் காங்கேயர்,
பொய்யூரில் கோரக்கர்,
சோதிரங்கத்தில் சட்டமுனி,
மதுரையில் சுந்தரானந்த தேவர் 60 எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிறது
சித்தர்கள் பற்றிய தகவல்கள்
சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகலை அடைய வேண்டும் என்றும் அறிவுறிதினர் அவைகளின் பெயரும் அதன் அர்த்தமும்
1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது
2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது
3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்
4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்
5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்
6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்
7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்
8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை (புற இன்பங்களை) தவிற்க்க வேண்டும்.
சித்தர்கள் பற்றிய தகவல்கள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தோன்றிய சித்தர் ஒருவர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தோன்றிய சித்தர் ஒருவர், தரையில் இருந்து வானத்தை நோக்கி ஏவுகணை(ராக்கெட்) வேகத்தில் பறந்து சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேசரர் ஆலயம் குறிப்பிடத்தக்கது. பஞ்சபூத சிவதலங்களில் அழனி(அக்னி) தலமாகப் போற்றப்படும் இங்கு ஏராளமான சித்தர்களும், யோகிகளும் இன்னமும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மின் ஊழியர் ஒருவர் கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சித்தர் ஒருவரை கண்டார். நீண்ட சடைமுடியுடன் காட்சியளித்த அந்தச் சித்தர் அந்தரத்தில் நடந்ததால் ஆச்சரியமடைந்த மின் ஊழியர் அந்தக் காட்சியை தனது செல்பேசியில் படம் பிடித்தார். திடீரென்று அந்த சித்தர் தரையில் இருந்து வானத்தை நோக்கி ஏவுகணை(rocket) வேகத்தில் பறந்துசென்று மறைந்துபோனார்.
அந்த விழியம்(video) ஜெயா தொலைக்காட்சி செய்தியில் வெளியிட்டுள்ளது.
http://www.mediafire.com/?mjmh2tyjmhj
கற்ப தேகம்
சித்தர்கள் அழியும் மனித உடலை அழியா கற்ப தேகமாக ஆக்கிக் கொள்வதை முக்கிய கடமையாகக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு வகையில் தங்கள் உடலை கற்ப தேகமாக மாற்றிக் கொண்டனர். அது சித்தர்களின் பரம ரகசியம்.
No comments:
Post a Comment