Saturday, December 11, 2010

திருக்குறள் - V - திருக்குறள் தமிழ் விளக்கத்துடன்

திருக்குறள் தமிழ் விளக்கத்துடன்


Thirukural with Meaning in Tamil


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: நன்றியில் செல்வம்

Thirukural - Chapter 101

1001 - வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்த தில்.

    அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?

    Who fills his house with ample store, enjoying none,
    Is dead. Nought with the useless heap is done.


    Explanation: He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).


    1002 - பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.

    யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.

    Who giving nought, opines from wealth all blessing springs,
    Degraded birth that doting miser's folly brings.


    Explanation: He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.


    1003 - ஈ.ட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.

    புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

    Who lust to heap up wealth, but glory hold not dear,
    It burthens earth when on the stage of being they appear.


    Explanation: A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.


    1004 - எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.

    யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?

    Whom no one loves, when he shall pass away,
    What doth he look to leave behind, I pray?


    Explanation: What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?


    1005 - கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்.

    கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

    Amid accumulated millions they are poor,
    Who nothing give and nought enjoy of all they store.


    Explanation: Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.


    1006 - ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
    றீத லியல்பிலா தான்.

    தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

    Their ample wealth is misery to men of churlish heart,
    Who nought themselves enjoy, and nought to worthy men impart.


    Explanation: He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.


    1007 - அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று.

    வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

    Like woman fair in lonelihood who aged grows,
    Is wealth of him on needy men who nought bestows.


    Explanation: The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.


    1008 - நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.

    வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!

    When he whom no man loves exults in great prosperity,
    'Tis as when fruits in midmost of the town some poisonous tree.


    Explanation: The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.


    1009 - அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்.

    அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

    Who love abandon, self-afflict, and virtue's way forsake
    To heap up glittering wealth, their hoards shall others take.


    Explanation: Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.


    1010 - சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனைய துடைத்து.

    சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

    'Tis as when rain cloud in the heaven grows day,
    When generous wealthy man endures brief poverty.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: நாணுடைமை

Thirukural - Chapter 102



1011 - கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.

    ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

    To shrink abashed from evil deed is 'generous shame';
    Other is that of bright-browed one of virtuous fame.


    Explanation: True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.


    1012 - ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.

    உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

    Food, clothing, and other things alike all beings own;
    By sense of shame the excellence of men is known.


    Explanation: Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.


    1013 - ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
    நன்மை குறித்தது சால்பு.

    உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

    All spirits homes of flesh as habitation claim,
    And perfect virtue ever dwells with shame.


    Explanation: As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.


    1014 - அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
    பிணியன்றோ பீடு நடை.

    நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

    And is not shame an ornament to men of dignity?
    Without it step of stately pride is piteous thing to see.


    Explanation: Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).


    1015 - பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
    குறைபதி என்னும் உலகு.

    தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

    As home of virtuous shame by all the world the men are known,
    Who feel ashamed for others, guilt as for their own.


    Explanation: The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.


    1016 - நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.

    பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.

    Unless the hedge of shame inviolate remain,
    For men of lofty soul the earth's vast realms no charms retain.


    Explanation: The great make modesty their barrier (of defence) and not the wide world.


    1017 - நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.

    நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

    The men of modest soul for shame would life an offering make,
    But ne'er abandon virtuous shame for life's dear sake.


    Explanation: The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.


    1018 - பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
    அறநாணத் தக்க துடைத்து.

    வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.

    Though know'st no shame, while all around asha med must be:
    Virtue will shrink away ashamed of thee!


    Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.


    1019 - குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.

    கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

    'Twill race consume if right observance fail;
    'Twill every good consume if shamelessness prevail.


    Explanation: Want of manners injures one's family; but want of modesty injures one's character.


    1020 - நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று.

    உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

    'Tis as with strings a wooden puppet apes life's functions, when
    Those void of shame within hold intercourse with men.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: குடி செயல்வகை

Thirukural - Chapter 103



1021 - கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
    பெருமையிற் பீடுடைய தில்.

    உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

    Who says 'I'll do my work, nor slack my hand',
    His greatness, clothed with dignity supreme, shall stand.


    Explanation: There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).


    1022 - ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
    நீள்வினையான் நீளும் குடி.

    ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

    The manly act and knowledge full, when these combine
    In deed prolonged, then lengthens out the race's line.


    Explanation: One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.


    1023 - குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.

    தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

    'I'll make my race renowned,' if man shall say,
    With vest succinct the goddess leads the way.


    Explanation: The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.


    1024 - சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
    தாழா துஞற்று பவர்க்கு.

    தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈ.டுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

    Who labours for his race with unremitting pain,
    Without a thought spontaneously, his end will gain.


    Explanation: Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.


    1025 - குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு.

    குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

    With blameless life who seeks to build his race's fame,
    The world shall circle him, and kindred claim.


    Explanation: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.


    1026 - நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

    நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

    Of virtuous manliness the world accords the praise
    To him who gives his powers, the house from which he sprang to raise.


    Explanation: A man's true manliness consists in making himself the head and benefactor of his family.


    1027 - அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை.

    போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.

    The fearless hero bears the brunt amid the warrior throng;
    Amid his kindred so the burthen rests upon the strong.


    Explanation: Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.


    1028 - குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.

    தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.

    Wait for no season, when you would your house uprear;
    'Twill perish, if you wait supine, or hold your honour dear.


    Explanation: As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.


    1029 - இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
    குற்ற மறைப்பான் உடம்பு.

    தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

    Is not his body vase that various sorrows fill,
    Who would his household screen from every ill?


    Explanation: Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?


    1030 - இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.

    வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.

    When trouble the foundation saps the house must fall,
    If no strong hand be nigh to prop the tottering wall.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: உழவு

Thirukural - Chapter 104



1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.

    பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

    Howe'er they roam, the world must follow still the plougher's team;
    Though toilsome, culture of the ground as noblest toil esteem.


    Explanation: Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.


    1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து.

    பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

    The ploughers are the linch-pin of the world; they bear
    Them up who other works perform, too weak its toils to share.


    Explanation: Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.


    1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.

    உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

    Who ploughing eat their food, they truly live:
    The rest to others bend subservient, eating what they give.


    Explanation: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.


    1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்.

    பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

    O'er many a land they 'll see their monarch reign,
    Whose fields are shaded by the waving grain.


    Explanation: Patriotic farmers desire to bring all other states under the control of their own king.


    1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.

    தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

    They nothing ask from others, but to askers give,
    Who raise with their own hands the food on which they live.


    Explanation: Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.


    1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேமென் பார்க்கும் நிலை.

    எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

    For those who 've left what all men love no place is found,
    When they with folded hands remain who till the ground.


    Explanation: If the farmer's hands are slackened, even the ascetic state will fail.


    1037 - தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.

    ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

    Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
    Without one handful of manure, Abundant crops you thus secure.


    Explanation: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.


    1038 - ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு.

    உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

    To cast manure is better than to plough;
    Weed well; to guard is more than watering now


    Explanation: Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).


    1039 - செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும்.

    உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

    When master from the field aloof hath stood;
    Then land will sulk, like wife in angry mood.


    Explanation: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.


    1040 - இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.

    வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

    The earth, that kindly dame, will laugh to see,
    Men seated idle pleading poverty.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: நல்குரவு

Thirukural - Chapter 105



1041 - இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

    வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

    You ask what sharper pain than poverty is known;
    Nothing pains more than poverty, save poverty alone.


    Explanation: There is nothing that afflicts (one) like poverty.


    1042 - இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.

    பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

    Malefactor matchless! poverty destroys
    This world's and the next world's joys.


    Explanation: When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).


    1043 - தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குர வென்னும் நசை.

    ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

    Importunate desire, which poverty men name,
    Destroys both old descent and goodly fame.


    Explanation: Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.


    1044 - இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.

    இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

    From penury will spring, 'mid even those of noble race,
    Oblivion that gives birth to words that bring disgrace.


    Explanation: Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.


    1045 - நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்.

    வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.

    From poverty, that grievous woe,
    Attendant sorrows plenteous grow.


    Explanation: The misery of poverty brings in its train many (more) miseries.


    1046 - நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.

    அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

    Though deepest sense, well understood, the poor man's words convey,
    Their sense from memory of mankind will fade away.


    Explanation: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.


    1047 - அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.

    வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

    From indigence devoid of virtue's grace,
    The mother e'en that bare, estranged, will turn her face.


    Explanation: He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.


    1048 - இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போலும் நிரப்பு.

    கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

    And will it come today as yesterday,
    The grief of want that eats my soul away?


    Explanation: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?


    1049 - நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பா டரிது.

    நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

    Amid the flames sleep may men's eyelids close,
    In poverty the eye knows no repose.


    Explanation: One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.


    1050 - துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

    ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

    Unless the destitute will utterly themselves deny,
    They cause their neighbour's salt and vinegar to die.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: இரவு

Thirukural - Chapter 106



1051 - இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று.

    கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

    When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
    Theirs is the sin, not yours, if they the gift deny.


    Explanation: If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.


    1052 - இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்.

    வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

    Even to ask an alms may pleasure give,
    If what you ask without annoyance you receive.


    Explanation: Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).


    1053 - கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
    றிரப்புமோர் ஏஎர் உடைத்து.

    உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.

    The men who nought deny, but know what's due, before their face
    To stand as suppliants affords especial grace.


    Explanation: There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).


    1054 - இரத்தலும் ஈ.தலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு.

    இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.

    Like giving alms, may even asking pleasant seem,
    From men who of denial never even dream.


    Explanation: To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);


    1055 - கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
    றிரப்பவர் மேற்கொள் வது.

    உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

    Because on earth the men exist, who never say them nay,
    Men bear to stand before their eyes for help to pray.


    Explanation: As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.


    1056 - கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    யெல்லா மொருங்கு கெடும்.

    இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

    It those you find from evil of 'denial' free,
    At once all plague of poverty will flee.


    Explanation: All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.


    1057 - இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்ப துடைத்து.

    இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

    If men are found who give and no harsh words of scorn employ,
    The minds of askers, through and through, will thrill with joy.


    Explanation: Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.


    1058 - இரப்பாரை யில்லாயின் ஈ.ர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று.

    வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

    If askers cease, the mighty earth, where cooling fountains flow,
    Will be a stage where wooden puppets come and go.


    Explanation: If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.


    1059 - ஈ.வார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை.

    இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.

    What glory will there be to men of generous soul,
    When none are found to love the askers' role?


    Explanation: What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).


    1060 - இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி.

    இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

    Askers refused from wrath must stand aloof;
    The plague of poverty itself is ample proof.


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: இரவச்சம்

Thirukural - Chapter 107



1061 - கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.

    இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

    Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
    Even from those, like eyes in worth, who nought concealing gladly give.


    Explanation: Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.


    1062 - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.

    பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

    If he that shaped the world desires that men should begging go,
    Through life's long course, let him a wanderer be and perish so.


    Explanation: If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.


    1063 - இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.

    வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

    Nothing is harder than the hardness that will say,
    'The plague of penury by asking alms we'll drive away.'


    Explanation: There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).


    1064 - இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.

    வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈ.டாகாது.

    Who ne'er consent to beg in utmost need, their worth
    Has excellence of greatness that transcends the earth.


    Explanation: Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.


    1065 - தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
    துண்ணலின் ஊங்கினிய தில்.

    கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

    Nothing is sweeter than to taste the toil-won cheer,
    Though mess of pottage as tasteless as the water clear.


    Explanation: Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.


    1066 - ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்.

    தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

    E'en if a draught of water for a cow you ask,
    Nought's so distasteful to the tongue as beggar's task.


    Explanation: There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.


    1067 - இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
    கரப்பார் இரவன்மின் என்று.

    கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

    One thing I beg of beggars all, 'If beg ye may,
    Of those who hide their wealth, beg not, I pray.'


    Explanation: I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."


    1068 - இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்.

    இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

    The fragile bark of beggary
    Wrecked on denial's rock will lie.


    Explanation: The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.


    1069 - இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

    இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

    The heart will melt away at thought of beggary,
    With thought of stern repulse 'twill perish utterly.


    Explanation: To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.


    1070 - கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.

    இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

    E'en as he asks, the shamefaced asker dies;
    Where shall his spirit hide who help denies?


திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: கயமை

Thirukural - Chapter 108



1071 - மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.

    குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

    The base resemble men in outward form, I ween;
    But counterpart exact to them I've never seen.


    Explanation: The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).


    1072 - நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவலம் இலர்.

    எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!

    Than those of grateful heart the base must luckier be,
    Their minds from every anxious thought are free!


    Explanation: The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).


    1073 - தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.

    புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

    The base are as the Gods; they too
    Do ever what they list to do!


    Explanation: The base resemble the Gods; for the base act as they like.


    1074 - அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

    பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

    When base men those behold of conduct vile,
    They straight surpass them, and exulting smile.


    Explanation: The base feels proud when he sees persons whose acts meaner than his own.


    1075 - அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

    தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

    Fear is the base man's virtue; if that fail,
    Intense desire some little may avail.


    Explanation: (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.


    1076 - அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

    மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

    The base are like the beaten drum; for, when they hear
    The sound the secret out in every neighbour's ear.


    Explanation: The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.


    1077 - ஈ.ர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.

    கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.

    From off their moistened hands no clinging grain they shake,
    Unless to those with clenched fist their jaws who break.


    Explanation: The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.


    1078 - சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
    கொல்லப் பயன்படும் கீழ்.

    குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

    The good to those will profit yield fair words who use;
    The base, like sugar-cane, will profit those who bruise.


    Explanation: The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.


    1079 - உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.

    ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

    If neighbours clothed and fed he see, the base
    Is mighty man some hidden fault to trace?


    Explanation: The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.


    1080 - எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
    விற்றற் குரியர் விரைந்து.

    ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

    For what is base man fit, if griefs assail?
    Himself to offer, there and then, for sale!


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: தகையணங்குறுத்தல்

Thirukural - Chapter 109



1081 - அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

    எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

    Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
    Is she a maid of human kind? All wildered is my mind!


    Explanation: Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.


    1082 - நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.

    அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

    She of the beaming eyes, To my rash look her glance replies,
    As if the matchless goddess' hand Led forth an armed band.


    Explanation: This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.


    1083 - பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.

    கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

    Death's form I formerly Knew not; but now 'tis plain to me;
    He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.


    Explanation: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.


    1084 - கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக் கமர்த்தன கண்.

    பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?

    In sweet simplicity, A woman's gracious form hath she;
    But yet those eyes, that drink my life, Are with the form at strife!


    Explanation: These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.


    1085 - கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து.

    உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

    The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
    Or fawn's shy glance? All three appear In form of maiden here.


    Explanation: Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?


    1086 - கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்னிவள் கண்.

    புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

    If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
    The shafts that wound this trembling heart Her eyes no more would dart.


    Explanation: Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.


    1087 - கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.

    மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

    As veil o'er angry eyes Of raging elephant that lies,
    The silken cincture's folds invest This maiden's panting breast.


    Explanation: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.


    1088 - ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு.

    களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!

    Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
    By lustre of that beaming brow Borne down, lies broken now!


    Explanation: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.


    1089 - பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
    கணியெவனோ ஏதில தந்து.

    பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

    Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
    What added beauty can be lent; By alien ornament?


    Explanation: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?


    1090 - உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று.

    மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

    The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
    But love hath rare felicity For those that only see!


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: குறிப்பறிதல்

Thirukural - Chapter 110



1091 - இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

    காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

    A double witchery have glances of her liquid eye;
    One glance is glance that brings me pain; the other heals again.


    Explanation: There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.


    1092 - கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது.

    கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

    The furtive glance, that gleams one instant bright,
    Is more than half of love's supreme delight.


    Explanation: A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).


    1093 - நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

    She looked, and looking drooped her head:
    On springing shoot of love 'its water shed!


    Explanation: She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.


    1094 - யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்.

    நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

    I look on her: her eyes are on the ground the while:
    I look away: she looks on me with timid smile.


    Explanation: When I look, she looks down; when I do not, she looks and smiles gently.


    1095 - குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்.

    அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

    She seemed to see me not; but yet the maid
    Her love, by smiling side-long glance, betrayed.


    Explanation: She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.


    1096 - உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்.

    காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

    Though with their lips affection they disown,
    Yet, when they hate us not, 'tis quickly known.


    Explanation: Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.


    1097 - செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

    பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

    The slighting words that anger feign, while eyes their love reveal.
    Are signs of those that love, but would their love conceal.


    Explanation: Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.


    1098 - அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்.

    நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

    I gaze, the tender maid relents the while;
    And, oh the matchless grace of that soft smile!


    Explanation: When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.


    1099 - ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.

    காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

    The look indifferent, that would its love disguise,
    Is only read aright by lovers' eyes.


    Explanation: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.


    1100 - கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.

    ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

    When eye to answering eye reveals the tale of love,
    All words that lips can say must useless prove.


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: புணர்ச்சி மகிழ்தல்

Thirukural - Chapter 111



1101 - கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.

    வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.

    All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
    In this resplendent armlets-bearing damsel live!


    Explanation: The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).


    1102 - பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து.

    நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

    Disease and medicine antagonists we surely see;
    This maid, to pain she gives, herself is remedy.


    Explanation: The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.


    1103 - தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.

    தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

    Than rest in her soft arms to whom the soul is giv'n,
    Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?


    Explanation: Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?


    1104 - நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்.

    நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.

    Withdraw, it burns; approach, it soothes the pain;
    Whence did the maid this wondrous fire obtain?


    Explanation: From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?


    1105 - வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்.

    விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

    In her embrace, whose locks with flowery wreaths are bound,
    Each varied form of joy the soul can wish is found.


    Explanation: The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).


    1106 - உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
    கமிழ்தின் இயன்றன தோள்.

    இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.

    Ambrosia are the simple maiden's arms; when I attain
    Their touch, my withered life puts forth its buds again!


    Explanation: The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.


    1107 - தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு.

    தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழுகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

    As when one eats from household store, with kindly grace
    Sharing his meal: such is this golden maid's embrace.


    Explanation: The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).


    1108 - வீழும் இருவர்க் கினிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.

    காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

    Sweet is the strict embrace of those whom fond affection binds,
    Where no dissevering breath of discord entrance finds.


    Explanation: To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.


    1109 - ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்.

    ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

    The jealous variance, the healing of the strife, reunion gained:
    These are the fruits from wedded love obtained.


    Explanation: Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.


    1110 - அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு.

    மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.

    The more men learn, the more their lack of learning they detect;
    'Tis so when I approach the maid with gleaming jewels decked.


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: நலம் புனைந்துரைத்தல்

Thirukural - Chapter 112


1111 - நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்.

    அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

    O flower of the sensitive plant! than thee
    More tender's the maiden beloved by me.


    Explanation: May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.


    1112 - மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று.

    மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.

    You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
    That many may see; it was surely some folly that over you stole!


    Explanation: O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.


    1113 - முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

    முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!

    As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
    Darts are the eyes of her whose shoulders like the bambu bend.


    Explanation: The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.


    1114 - காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று.

    என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

    The lotus, seeing her, with head demiss, the ground would eye,
    And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'


    Explanation: If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."


    1115 - அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
    நல்ல படாஅ பறை.

    அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

    The flowers of the sensitive plant as a girdle around her she placed;
    The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.


    Explanation: No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.


    1116 - மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்.

    மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

    The stars perplexed are rushing wildly from their spheres;
    For like another moon this maiden's face appears.


    Explanation: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.


    1117 - அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து.

    தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

    In moon, that waxing waning shines, as sports appear,
    Are any spots discerned in face of maiden here?


    Explanation: Could there be spots in the face of this maid like those in the bright full moon ?


    1118 - மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி.

    முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

    Farewell, O moon! If that thine orb could shine
    Bright as her face, thou shouldst be love of mine.


    Explanation: If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?


    1119 - மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.

    நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

    If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
    Shine for my eyes alone, O moon, shine not for all to see!


    Explanation: O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.


    1120 - அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்.

    அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை.

    The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
    As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: காதற் சிறப்புரைத்தல்

Thirukural - Chapter 113



1121 - பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலேயி றூறிய நீர்.

    இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

    The dew on her white teeth, whose voice is soft and low,
    Is as when milk and honey mingled flow.


    Explanation: The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.


    1122 - உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொ டெம்மிடை நட்பு.

    உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.

    Between this maid and me the friendship kind
    Is as the bonds that soul and body bind.


    Explanation: The love between me and this damsel is like the union of body and soul.


    1123 - கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற் கில்லை யிடம்.

    நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!

    For her with beauteous brow, the maid I love, there place is none;
    To give her image room, O pupil of mine eye, begone!


    Explanation: O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.


    1124 - வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து.

    ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

    Life is she to my very soul when she draws nigh;
    Dissevered from the maid with jewels rare, I die!


    Explanation: My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.


    1125 - உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

    ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.

    I might recall, if I could once forget; but from my heart
    Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.


    Explanation: If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).


    1126 - கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
    நுண்ணியர்எம் காத லவர்.

    காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

    My loved one's subtle form departs not from my eyes;
    I wink them not, lest I should pain him where he lies.


    Explanation: My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.


    1127 - கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக் கறிந்து.

    காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

    My love doth ever in my eyes reside;
    I stain them not, fearing his form to hide.


    Explanation: As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.


    1128 - நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து.

    சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.

    Within my heart my lover dwells; from food I turn
    That smacks of heat, lest he should feel it burn.


    Explanation: As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.


    1129 - இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னுமிவ் வூர்.

    கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.

    I fear his form to hide, nor close my eyes:
    'Her love estranged is gone!' the village cries.


    Explanation: I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.


    1130 - உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னுமிவ் வூர்.

    காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.

    Rejoicing in my very soul he ever lies;
    'Her love estranged is gone far off!' the village cries.


 திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: நாணுத் துறவுரைத்தல்

Thirukural - Chapter 114


1131 - காமம் உழந்து வருந்தினார்க் கேம
    மடலல்ல தில்லை வலி.

    காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

    To those who 've proved love's joy, and now afflicted mourn,
    Except the helpful 'horse of palm', no other strength remains.


    Explanation: To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.


    1132 - நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து.

    எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

    My body and my soul, that can no more endure,
    Will lay reserve aside, and mount the 'horse of palm'.


    Explanation: Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.


    1133 - நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்.

    நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

    I once retained reserve and seemly manliness;
    To-day I nought possess but lovers' 'horse of palm'.


    Explanation: Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.


    1134 - காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.

    காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

    Love's rushing tide will sweep away the raft
    Of seemly manliness and shame combined.


    Explanation: The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.


    1135 - தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்.

    மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

    The maid that slender armlets wears, like flowers entwined,
    Has brought me 'horse of palm,' and pangs of eventide!


    Explanation: She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.


    1136 - மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படலொல்லா பேதைக்கென் கண்.

    காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

    Of climbing 'horse of palm' in midnight hour, I think;
    My eyes know no repose for that same simple maid.


    Explanation: Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.


    1137 - கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணிற் பெருந்தக்க தில்.

    கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

    There's nought of greater worth than woman's long-enduring soul,
    Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.


    Explanation: There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.


    1138 - நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்.

    பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

    In virtue hard to move, yet very tender, too, are we;
    Love deems not so, would rend the veil, and court publicity!


    Explanation: Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).


    1139 - அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு.

    என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

    'There's no one knows my heart,' so says my love,
    And thus, in public ways, perturbed will rove.


    Explanation: My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).


    1140 - யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு.

    காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

    Before my eyes the foolish make a mock of me,
    Because they ne'er endured the pangs I now must drie.


திருக்குறள் :: காமத்துப்பால் :: களவியல் :: அலரறிவுறுத்தல்

Thirukural - Chapter 115



1141 - அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்.

    எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.

    By this same rumour's rise, my precious life stands fast;
    Good fortune grant the many know this not!


    Explanation: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.


    1142 - மலரன்ன கண்ணாள் அருமை அறியா
    தலரெமக் கீந்ததிவ் வூர்.

    அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

    The village hath to us this rumour giv'n, that makes her mine;
    Unweeting all the rareness of the maid with flower-like eyne.


    Explanation: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.


    1143 - உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

    எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

    The rumour spread within the town, is it not gain to me?
    It is as though that were obtained that may not be.


    Explanation: Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).


    1144 - கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து.

    ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.

    The rumour rising makes my love to rise;
    My love would lose its power and languish otherwise.


    Explanation: Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.


    1145 - களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது.

    காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

    The more man drinks, the more he ever drunk would be;
    The more my love's revealed, the sweeter 'tis to me!


    Explanation: As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.


    1146 - கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.

    காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

    I saw him but one single day: rumour spreads soon
    As darkness, when the dragon seizes on the moon.


    Explanation: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.


    1147 - ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளுமிந் நோய்.

    ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

    My anguish grows apace: the town's report
    Manures it; my mother's word doth water it.


    Explanation: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.


    1148 - நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
    காமம் நுதுப்பேம் எனல்.

    ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

    With butter-oil extinguish fire! 'Twill prove
    Harder by scandal to extinguish love.


    Explanation: To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.


    1149 - அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
    பலர்நாண நீத்தக் கடை.

    உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?

    When he who said 'Fear not!' hath left me blamed,
    While many shrink, can I from rumour hide ashamed?


    Explanation: When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.


    1150 - தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கௌவை எடுக்குமிவ் வூர்.

    யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.

    If we desire, who loves will grant what we require;
    This town sends forth the rumour we desire!

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: பிரிவாற்றாமை

Thirukural - Chapter 116

1151 - செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.

    பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.

    If you will say, 'I leave thee not,' then tell me so;
    Of quick return tell those that can survive this woe.


    Explanation: If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.


    1152 - இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு.

    முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

    It once was perfect joy to look upon his face;
    But now the fear of parting saddens each embrace.


    Explanation: His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.


    1153 - அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.

    பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது.

    To trust henceforth is hard, if ever he depart,
    E'en he, who knows his promise and my breaking heart.


    Explanation: As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.


    1154 - அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க் குண்டோ தவறு.

    பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?

    If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
    By those who trusted to his reassuring word?


    Explanation: If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?


    1155 - ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு.

    காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.

    If you would guard my life, from going him restrain
    Who fills my life! If he depart, hardly we meet again.


    Explanation: If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.


    1156 - பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை.

    போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

    To cherish longing hope that he should ever gracious be,
    Is hard, when he could stand, and of departure speak to me.


    Explanation: If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.


    1157 - துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை.

    என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

    The bracelet slipping from my wrist announced before
    Departure of the Prince that rules the ocean shore.


    Explanation: Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?


    1158 - இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
    இன்னா தினியார்ப் பிரிவு.

    நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

    'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
    'Tis sadder still to bid a friend beloved farewell.


    Explanation: Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.


    1159 - தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

    ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

    Fire burns the hands that touch; but smart of love
    Will burn in hearts that far away remove.


    Explanation: Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?


    1160 - அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்.

    காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?

    Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,
    Separation uncomplaining Many bear the livelong day!



திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: படர்மெலிந்திரங்கல்

Thirukural - Chapter 117



1161 - மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
    கூற்றுநீர் போல மிகும்.

    இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

    I would my pain conceal, but see! it surging swells,
    As streams to those that draw from ever-springing wells.


    Explanation: I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.


    1162 - கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
    குரைத்தலும் நாணுத் தரும்.

    காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

    I cannot hide this pain of mine, yet shame restrains
    When I would tell it out to him who caused my pains.


    Explanation: I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.


    1163 - காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
    நோனா உடம்பின் அகத்து.

    பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

    My soul, like porter's pole, within my wearied frame,
    Sustains a two-fold burthen poised, of love and shame.


    Explanation: (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.


    1164 - காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.

    காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.

    A sea of love, 'tis true, I see stretched out before,
    But not the trusty bark that wafts to yonder shore.


    Explanation: There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.


    1165 - துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்.

    நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

    Who work us woe in friendship's trustful hour,
    What will they prove when angry tempests lower?


    Explanation: He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?


    1166 - இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது.

    காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

    A happy love 's sea of joy; but mightier sorrows roll
    From unpropitious love athwart the troubled soul.


    Explanation: The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.


    1167 - காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.

    நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

    I swim the cruel tide of love, and can no shore descry,
    In watches of the night, too, 'mid the waters, only I!


    Explanation: I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.


    1168 - மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்ல தில்லை துணை.

    `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'

    All living souls in slumber soft she steeps;
    But me alone kind night for her companing keeps!


    Explanation: The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.


    1169 - கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா.

    இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

    More cruel than the cruelty of him, the cruel one,
    In these sad times are lengthening hours of night I watch alone.


    Explanation: The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.


    1170 - உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோவென் கண்.

    காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

    When eye of mine would as my soul go forth to him,
    It knows not how through floods of its own tears to swim.



திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: கண்விதுப்பழிதல்

Thirukural - Chapter 118



1171 - கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாங்காட்ட யாங்கண் டது.

    கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

    They showed me him, and then my endless pain
    I saw: why then should weeping eyes complain?


    Explanation: As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).


    1172 - தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்ப தெவன்.

    விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

    How glancing eyes, that rash unweeting looked that day,
    With sorrow measureless are wasting now away!


    Explanation: The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).


    1173 - கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து.

    தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.

    The eyes that threw such eager glances round erewhile
    Are weeping now. Such folly surely claims a smile!


    Explanation: They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?


    1174 - பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து.

    தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

    Those eyes have wept till all the fount of tears is dry,
    That brought upon me pain that knows no remedy.


    Explanation: These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.


    1175 - படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
    காமநோய் செய்தவென் கண்.

    கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

    The eye that wrought me more than sea could hold of woes,
    Is suffering pangs that banish all repose.


    Explanation: Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.


    1176 - ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது.

    ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

    Oho! how sweet a thing to see! the eye
    That wrought this pain, in the same gulf doth lie.


    Explanation: The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.


    1177 - உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்.

    அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.

    Aching, aching, let those exhaust their stream,
    That melting, melting, that day gazed on him.


    Explanation: The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.


    1178 - பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணா தமைவில கண்.

    என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

    Who loved me once, onloving now doth here remain;
    Not seeing him, my eye no rest can gain.


    Explanation: He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.


    1179 - வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்.

    இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.

    When he comes not, all slumber flies; no sleep when he is there;
    Thus every way my eyes have troubles hard to bear.


    Explanation: When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.


    1180 - மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து.

    காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.

    It is not hard for all the town the knowledge to obtain,
    When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: பசப்பறுபருவரல்

Thirukural - Chapter 119



1181 - நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க் குரைக்கோ பிற.

    என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

    I willed my lover absent should remain;
    Of pining's sickly hue to whom shall I complain?


    Explanation: I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.


    1182 - அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு.

    பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

    'He gave': this sickly hue thus proudly speaks,
    Then climbs, and all my frame its chariot makes.


    Explanation: Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.


    1183 - சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து.

    காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

    Of comeliness and shame he me bereft,
    While pain and sickly hue, in recompense, he left.


    Explanation: He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.


    1184 - உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு.

    யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

    I meditate his words, his worth is theme of all I say,
    This sickly hue is false that would my trust betray.


    Explanation: I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.


    1185 - உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
    மேனி பசப்பூர் வது.

    என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

    My lover there went forth to roam;
    This pallor of my frame usurps his place at home.


    Explanation: Just as my lover departed then, did not sallowness spread here on my person ?


    1186 - விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

    விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.

    As darkness waits till lamp expires, to fill the place,
    This pallor waits till I enjoy no more my lord's embrace.


    Explanation: Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.


    1187 - புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

    தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

    I lay in his embrace, I turned unwittingly;
    Forthwith this hue, as you might grasp it, came on me.


    Explanation: I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.


    1188 - பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
    துறந்தார் அவரென்பார் இல்.

    இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.

    On me, because I pine, they cast a slur;
    But no one says, 'He first deserted her.'


    Explanation: Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".


    1189 - பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்.

    பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!

    Well! let my frame, as now, be sicklied o'er with pain,
    If he who won my heart's consent, in good estate remain!


    Explanation: If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.


    1190 - பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்.

    என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

    'Tis well, though men deride me for my sickly hue of pain;
    If they from calling him unkind, who won my love, refrain.



திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: தனிப்படர்மிகுதி

Thirukural - Chapter 120


1191 - தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி.

    தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

    The bliss to be beloved by those they love who gains,
    Of love the stoneless, luscious fruit obtains.


    Explanation: The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?


    1192 - வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி.

    காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

    As heaven on living men showers blessings from above,
    Is tender grace by lovers shown to those they love.


    Explanation: The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.


    1193 - வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.

    காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

    Who love and are beloved to them alone
    Belongs the boast, 'We've made life's very joys our own.'


    Explanation: The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).


    1194 - வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்.

    விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

    Those well-beloved will luckless prove,
    Unless beloved by those they love.


    Explanation: Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.


    1195 - நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை.

    நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?

    From him I love to me what gain can be,
    Unless, as I love him, he loveth me?


    Explanation: He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?


    1196 - ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
    இருதலை யானும் இனிது.

    காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

    Love on one side is bad; like balanced load
    By porter borne, love on both sides is good.


    Explanation: Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.


    1197 - பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்.

    காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!

    While Kaman rushes straight at me alone,
    Is all my pain and wasting grief unknown?


    Explanation: Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?


    1198 - வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.

    பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

    Who hear from lover's lips no pleasant word from day to day,
    Yet in the world live out their life,- no braver souls than they!


    Explanation: There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.


    1199 - நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
    டிசையும் இனிய செவிக்கு.

    என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

    Though he my heart desires no grace accords to me,
    Yet every accent of his voice is melody.


    Explanation: Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.


    1200 - உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு.

    நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.

    Tell him thy pain that loves not thee?
    Farewell, my soul, fill up the sea!


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: நினைந்தவர் புலம்பல்

Thirukural - Chapter 121


1201 - உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.

    உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

    From thought of her unfailing gladness springs,
    Sweeter than palm-rice wine the joy love brings.


    Explanation: Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.


    1202 - எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன் றில்.

    விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

    How great is love! Behold its sweetness past belief!
    Think on the lover, and the spirit knows no grief.


    Explanation: Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.


    1203 - நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.

    வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

    A fit of sneezing threatened, but it passed away;
    He seemed to think of me, but do his fancies stray?


    Explanation: I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.


    1204 - யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
    தோஒ உளரே அவர்.

    என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

    Have I a place within his heart!
    From mine, alas! he never doth depart.


    Explanation: He continues to abide in my soul, do I likewise abide in his ?


    1205 - தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத் தோவா வரல்.

    அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

    Me from his heart he jealously excludes:
    Hath he no shame who ceaseless on my heart intrudes?


    Explanation: He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.


    1206 - மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
    உற்றநாள் உள்ள உளேன்.

    நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

    How live I yet? I live to ponder o'er
    The days of bliss with him that are no more.


    Explanation: I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?


    1207 - மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.

    மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

    If I remembered not what were I then? And yet,
    The fiery smart of what my spirit knows not to forget!


    Explanation: I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?


    1208 - எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு.

    எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

    My frequent thought no wrath excites. It is not so?
    This honour doth my love on me bestow.


    Explanation: He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?


    1209 - விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.

    ``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
    Who said erewhile, 'We're one for evermore'.


    Explanation: My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.


    1210 - விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.

    நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

    Set not; so may'st thou prosper, moon! that eyes may see
    My love who went away, but ever bides with me.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: கனவு நிலையுரைத்தல்

Thirukural - Chapter 122

1211 - காதலர் தூதொடு வந்த கனவினுக்
    கியாதுசெய் வேன்கொல் விருந்து.

    வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

    It came and brought to me, that nightly vision rare,
    A message from my love,- what feast shall I prepare?


    Explanation: Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?


    1212 - கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
    குயலுண்மை சாற்றுவேன் மன்.

    நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

    If my dark, carp-like eye will close in sleep, as I implore,
    The tale of my long-suffering life I'll tell my loved one o'er.


    Explanation: If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.


    1213 - நனவினான் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்.

    நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

    Him, who in waking hour no kindness shows,
    In dreams I see; and so my lifetime goes!


    Explanation: My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.


    1214 - கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.

    நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

    Some pleasure I enjoy when him who loves not me
    In waking hours, the vision searches out and makes me see.


    Explanation: There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.


    1215 - நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.

    காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

    As what I then beheld in waking hour was sweet,
    So pleasant dreams in hour of sleep my spirit greet.


    Explanation: I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.


    1216 - நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
    காதலர் நீங்கலர் மன்.

    நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

    And if there were no waking hour, my love
    In dreams would never from my side remove.


    Explanation: Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.


    1217 - நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
    என்னெம்மைப் பீழிப் பது.

    நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

    The cruel one, in waking hour, who all ungracious seems,
    Why should he thus torment my soul in nightly dreams?


    Explanation: The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?


    1218 - துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

    தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

    And when I sleep he holds my form embraced;
    And when I wake to fill my heart makes haste!


    Explanation: When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.


    1219 - நனவினான் நல்காரை நோவர் கனவினான்
    காதலர்க் காணா தவர்.

    கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

    In dreams who ne'er their lover's form perceive,
    For those in waking hours who show no love will grieve.


    Explanation: They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.


    1220 - நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
    காணார்கொல் இவ்வூ ரவர்.

    என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

    They say, that he in waking hours has left me lone;
    In dreams they surely see him not,- these people of the town;


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: பொழுது கண்டிரங்கல்

Thirukural - Chapter 123

1221 - மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது.

    நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!

    Thou art not evening, but a spear that doth devour
    The souls of brides; farewell, thou evening hour!


    Explanation: Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.


    1222 - புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.

    மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

    Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
    Of cruel eye, as is my spouse, is too thy bride?


    Explanation: A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.


    1223 - பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்.

    பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

    With buds of chilly dew wan evening's shade enclose;
    My anguish buds space and all my sorrow grows.


    Explanation: The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.


    1224 - காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
    தேதிலர் போல வரும்.

    காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

    When absent is my love, the evening hour descends,
    As when an alien host to field of battle wends.


    Explanation: In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.


    1225 - காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை.

    மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது.

    O morn, how have I won thy grace? thou bring'st relief
    O eve, why art thou foe! thou dost renew my grief.


    Explanation: What good have I done to morning (and) what evil to evening?


    1226 - மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்.

    மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

    The pangs that evening brings I never knew,
    Till he, my wedded spouse, from me withdrew.


    Explanation: Previous to my husband's departure, I know not the painful nature of evening.


    1227 - காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலருமிந் நோய்.

    காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

    My grief at morn a bud, all day an opening flower,
    Full-blown expands in evening hour.


    Explanation: This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.


    1228 - அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.

    காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

    The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
    For it proclaims the hour of ev'ning's fiery anguish near.


    Explanation: The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).


    1229 - பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து.

    என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

    If evening's shades, that darken all my soul, extend;
    From this afflicted town will would of grief ascend.


    Explanation: When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.


    1230 - பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயுமென் மாயா உயிர்.

    பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

    This darkening eve, my darkling soul must perish utterly;
    Remembering him who seeks for wealth, but seeks not me.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: உறுப்பு நலனழிதல்

Thirukural - Chapter 124

1231 - சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்.

    பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

    Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
    Thinking on him, who wand'ring far, leaves us in misery.


    Explanation: While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.


    1232 - நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்.

    பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

    The eye, with sorrow wan, all wet with dew of tears,
    As witness of the lover's lack of love appears.


    Explanation: The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.


    1233 - தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்.

    தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

    These withered arms, desertion's pangs abundantly display,
    That swelled with joy on that glad nuptial day.


    Explanation: The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).


    1234 - பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.

    பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

    When lover went, then faded all their wonted charms,
    And armlets' golden round slips off from these poor wasted arms.


    Explanation: In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.


    1235 - கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.

    வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

    These wasted arms, the bracelet with their wonted beauty gone,
    The cruelty declare of that most cruel one.


    Explanation: The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.


    1236 - தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
    கொடியார் எனக்கூறல் நொந்து.

    என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

    I grieve, 'tis pain to me to hear him cruel chid,
    Because the armlet from my wasted arm has slid.


    Explanation: I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.


    1237 - பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூசல் உரைத்து.

    நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

    My heart! say ought of glory wilt thou gain,
    If to that cruel one thou of thy wasted arms complain?


    Explanation: Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?


    1238 - முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்.

    இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

    One day the fervent pressure of embracing arms I checked,
    Grew wan the forehead of the maid with golden armlet decked.


    Explanation: When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.


    1239 - முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.

    இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

    As we embraced a breath of wind found entrance there;
    The maid's large liquid eyes were dimmed with care.


    Explanation: When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.


    1240 - கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு.

    பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.

    The dimness of her eye felt sorrow now,
    Beholding what was done by that bright brow.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: நெஞ்சொடு கிளத்தல்

Thirukural - Chapter 125

1241 - நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கு மருந்து.

    எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

    My heart, canst thou not thinking of some med'cine tell,
    Not any one, to drive away this grief incurable?


    Explanation: O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?


    1242 - காத லவரிலர் ஆகநீ நோவது
    பேதமை வாழியென் நெஞ்சு.

    அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

    Since he loves not, thy smart
    Is folly, fare thee well my heart!


    Explanation: May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.


    1243 - இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்.

    பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?

    What comes of sitting here in pining thought, O heart? He knows
    No pitying thought, the cause of all these wasting woes.


    Explanation: O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.


    1244 - கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று.

    நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.

    O rid me of these eyes, my heart; for they,
    Longing to see him, wear my life away.


    Explanation: O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.


    1245 - செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்.

    நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

    O heart, as a foe, can I abandon utterly
    Him who, though I long for him, longs not for me?


    Explanation: O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?


    1246 - கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

    நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

    My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
    If thou thy love behold, embracing, soothing all thy pain.


    Explanation: O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.


    1247 - காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேனிவ் விரண்டு.

    நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

    Or bid thy love, or bid thy shame depart;
    For me, I cannot bear them both, my worthy heart!


    Explanation: O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.


    1248 - பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

    நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

    Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
    And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'


    Explanation: You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.


    1249 - உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு.

    உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

    My heart! my lover lives within my mind;
    Roaming, whom dost thou think to find?


    Explanation: O my soul! to whom would you repair, while the dear one is within yourself?


    1250 - துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.

    சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

    If I should keep in mind the man who utterly renounces me,
    My soul must suffer further loss of dignity.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: நிறையழிதல்

Thirukural - Chapter 126

1251 - காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

    காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

    Of womanly reserve love's axe breaks through the door,
    Barred by the bolt of shame before.


    Explanation: The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.


    1252 - காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.

    காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

    What men call love is the one thing of merciless power;
    It gives my soul no rest, e'en in the midnight hour.


    Explanation: Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.


    1253 - மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.

    எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

    I would my love conceal, but like a sneeze
    It shows itself, and gives no warning sign.


    Explanation: I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.


    1254 - நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
    மறையிறந்து மன்று படும்.

    மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

    In womanly reserve I deemed myself beyond assail;
    But love will come abroad, and casts away the veil.


    Explanation: I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.


    1255 - செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன் றன்று.

    தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

    The dignity that seeks not him who acts as foe,
    Is the one thing that loving heart can never know.


    Explanation: The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.


    1256 - செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்.

    வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.

    My grief how full of grace, I pray you see!
    It seeks to follow him that hateth me.


    Explanation: The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?


    1257 - நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்.

    நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

    No sense of shame my gladdened mind shall prove,
    When he returns my longing heart to bless with love.


    Explanation: I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).


    1258 - பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.

    நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?

    The words of that deceiver, versed in every wily art,
    Are instruments that break through every guard of woman's heart!


    Explanation: Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?


    1259 - புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு.

    ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

    'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
    I held him in my arms, for straight I felt my heart relent.


    Explanation: I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!


    1260 - நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

    நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

    'We 'll stand aloof and then embrace': is this for them to say,
    Whose hearts are as the fat that in the blaze dissolves away?


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: அவர்வயின் விதும்பல்

Thirukural - Chapter 127

1261 - வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.

    வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

    My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
    With nothing on the wall the days since I was left forlorn.


    Explanation: My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.


    1262 - இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து.

    காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

    O thou with gleaming jewels decked, could I forget for this one day,
    Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.


    Explanation: O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.


    1263 - உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்.

    ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

    On victory intent, His mind sole company he went;
    And I yet life sustain! And long to see his face again!


    Explanation: I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.


    1264 - கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு.

    காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

    'He comes again, who left my side, and I shall taste love's joy,'-
    My heart with rapture swells, when thoughts like these my mind employ.


    Explanation: My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.


    1265 - காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்குமென் மென்தோள் பசப்பு.

    கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

    O let me see my spouse again and sate these longing eyes!
    That instant from my wasted frame all pallor flies.


    Explanation: May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.


    1266 - வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.

    என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

    O let my spouse but come again to me one day!
    I'll drink that nectar: wasting grief shall flee away.


    Explanation: May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.


    1267 - புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்ணன்ன கேளிர் வரின்.

    கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

    Shall I draw back, or yield myself, or shall both mingled be,
    When he returns, my spouse, dear as these eyes to me.


    Explanation: On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?


    1268 - வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.

    தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

    O would my king would fight, o'ercome, devide the spoil;
    At home, to-night, the banquet spread should crown the toil.


    Explanation: Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.


    1269 - ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

    நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

    One day will seem like seven to those who watch and yearn
    For that glad day when wanderers from afar return.


    Explanation: To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.


    1270 - பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்.

    துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

    What's my return, the meeting hour, the wished-for greeting worth,
    If she heart-broken lie, with all her life poured forth?

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: குறிப்பறிவுறுத்தல்

Thirukural - Chapter 128

1271 - கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு.

    வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

    Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
    Something, I know not, what, would utter of complaint.


    Explanation: Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.


    1272 - கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது.

    கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

    The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
    Like bambu stem, hath all a woman's modest sweet reserve.


    Explanation: Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.


    1273 - மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு.

    மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

    As through the crystal beads is seen the thread on which they 're strung
    So in her beauty gleams some thought cannot find a tongue.


    Explanation: There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.


    1274 - முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

    மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

    As fragrance in the opening bud, some secret lies
    Concealed in budding smile of this dear damsel's eyes.


    Explanation: There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.


    1275 - செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

    வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

    The secret wiles of her with thronging armlets decked,
    Are medicines by which my raising grief is checked.


    Explanation: The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.


    1276 - பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.

    ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

    While lovingly embracing me, his heart is only grieved:
    It makes me think that I again shall live of love bereaved.


    Explanation: The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.


    1277 - தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை.

    குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

    My severance from the lord of this cool shore,
    My very armlets told me long before.


    Explanation: My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.


    1278 - நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.

    நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

    My loved one left me, was it yesterday?
    Days seven my pallid body wastes away!


    Explanation: It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.


    1279 - தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது.

    பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

    She viewed her tender arms, she viewed the armlets from them slid;
    She viewed her feet: all this the lady did.


    Explanation: She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).


    1280 - பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.

    காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

    To show by eye the pain of love, and for relief to pray,
    Is womanhood's most womanly device, men say.


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: புணர்ச்சிவிதும்பல்

Thirukural - Chapter 129

1281 - உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

    மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

    Gladness at the thought, rejoicing at the sight,
    Not palm-tree wine, but love, yields such delight.


    Explanation: To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.


    1282 - தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்.

    பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    When as palmyra tall, fulness of perfect love we gain,
    Distrust can find no place small as the millet grain.


    Explanation: If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.


    1283 - பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்.

    என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

    Although his will his only law, he lightly value me,
    My heart knows no repose unless my lord I see.


    Explanation: Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.


    1284 - ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

    ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

    My friend, I went prepared to show a cool disdain;
    My heart, forgetting all, could not its love restrain.


    Explanation: O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.


    1285 - எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
    பழிகாணேன் கண்ட இடத்து.

    கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

    The eye sees not the rod that paints it; nor can I
    See any fault, when I behold my husband nigh.


    Explanation: Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.


    1286 - காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை.

    அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

    When him I see, to all his faults I 'm blind;
    But when I see him not, nothing but faults I find.


    Explanation: When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.


    1287 - உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து.

    வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

    As those of rescue sure, who plunge into the stream,
    So did I anger feign, though it must falsehood seem?


    Explanation: Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?


    1288 - இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.

    என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

    Though shameful ill it works, dear is the palm-tree wine
    To drunkards; traitor, so to me that breast of thine!


    Explanation: O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.


    1289 - மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்.

    காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

    Love is tender as an opening flower. In season due
    To gain its perfect bliss is rapture known to few.


    Explanation: Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.


    1290 - கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று.

    விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

    Her eye, as I drew nigh one day, with anger shone:
    By love o'erpowered, her tenderness surpassed my own.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: நெஞ்சொடுபுலத்தல்

Thirukural - Chapter 130

1291 - அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீயெமக் காகா தது.

    நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

    You see his heart is his alone
    O heart, why not be all my own?


    Explanation: O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?


    1292 - உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

    நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.

    'Tis plain, my heart, that he 's estranged from thee;
    Why go to him as though he were not enemy?


    Explanation: O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."


    1293 - கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங் கவர்பின் செலல்.

    நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

    'The ruined have no friends, 'they say; and so, my heart,
    To follow him, at thy desire, from me thou dost depart.


    Explanation: O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?


    1294 - இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

    நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

    'See, thou first show offended pride, and then submit,' I bade;
    Henceforth such council who will share with thee my heart?


    Explanation: O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?


    1295 - பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

    என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

    I fear I shall not gain, I fear to lose him when I gain;
    And thus my heart endures unceasing pain.


    Explanation: My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.


    1296 - தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு.

    காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

    My heart consumes me when I ponder lone,
    And all my lover's cruelty bemoan.


    Explanation: My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.


    1297 - நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
    மாணா மடநெஞ்சிற் பட்டு.

    அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

    Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
    Which will not him forget, I have forgotten shame.


    Explanation: I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.


    1298 - எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

    பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

    If I contemn him, then disgrace awaits me evermore;
    My soul that seeks to live his virtues numbers o'er.


    Explanation: My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.


    1299 - துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.

    துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

    And who will aid me in my hour of grief,
    If my own heart comes not to my relief?


    Explanation: Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?


    1300 - தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி.

    நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

    A trifle is unfriendliness by aliens shown,
    When our own heart itself is not our own!


திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: புலவி

Thirukural - Chapter 131

1301 - புல்லா திராஅப் புலத்தை அவருறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.

    ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

    Be still reserved, decline his profferred love;
    A little while his sore distress we 'll prove.


    Explanation: Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.


    1302 - உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.

    ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.

    A cool reserve is like the salt that seasons well the mess,
    Too long maintained, 'tis like the salt's excess.


    Explanation: A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.


    1303 - அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.

    ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

    'Tis heaping griefs on those whose hearts are grieved;
    To leave the grieving one without a fond embrace.


    Explanation: For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.


    1304 - ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.

    ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

    To use no kind conciliating art when lover grieves,
    Is cutting out the root of tender winding plant that droops.


    Explanation: Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.


    1305 - நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
    பூவன்ன கண்ணார் அகத்து.

    மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.

    Even to men of good and worthy mind, the petulance
    Of wives with flowery eyes lacks not a lovely grace.


    Explanation: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.


    1306 - துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.

    பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

    Love without hatred is ripened fruit;
    Without some lesser strife, fruit immature.


    Explanation: Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.


    1307 - ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று.

    கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.

    A lovers' quarrel brings its pain, when mind afraid
    Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'


    Explanation: The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.


    1308 - நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
    காதலர் இல்லா வழி.

    நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

    What good can grieving do, when none who love
    Are there to know the grief thy soul endures?


    Explanation: What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?


    1309 - நீரும் நிழல தினிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.

    நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

    Water is pleasant in the cooling shade;
    So coolness for a time with those we love.


    Explanation: Like water in the shade, dislike is delicious only in those who love.


    1310 - ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
    கூடுவேம் என்ப தவா.

    ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

    Of her who leaves me thus in variance languishing,
    To think within my heart with love is fond desire.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: புலவி நுணுக்கம்

Thirukural - Chapter 132

1311 - பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.

    பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

    From thy regard all womankind Enjoys an equal grace;
    O thou of wandering fickle mind, I shrink from thine embrace!


    Explanation: You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.


    1312 - ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.

    ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து.

    One day we silent sulked; he sneezed: The reason well I knew;
    He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'


    Explanation: When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.


    1313 - கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று.

    கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

    I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
    She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'


    Explanation: Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.


    1314 - யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று.

    ``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

    'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
    'What all, what all?' she instant cried; And all her anger woke.


    Explanation: When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.


    1315 - இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.

    ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

    'While here I live, I leave you not,' I said to calm her fears.
    She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.


    Explanation: When I said I would never part from her in this life her eyes were filled with tears.


    1316 - உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்.

    ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்.

    'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
    She cried, and then her opened arms, Forthwith embraced me not.


    Explanation: When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.


    1317 - வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.

    தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.

    She hailed me when I sneezed one day; But straight with anger seized,
    She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'


    Explanation: When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"


    1318 - தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.

    ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்.

    And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
    (That woman difficult to please), 'Your thoughts from me you hide'.


    Explanation: When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".


    1319 - தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று.

    நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்.

    I then began to soothe and coax, To calm her jealous mind;
    'I see', quoth she, 'to other folks How you are wondrous kind'


    Explanation: Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."


    1320 - நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.

    ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

    I silent sat, but thought the more, And gazed on her. Then she
    Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'.

திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: ஊடலுவகை

Thirukural - Chapter 133

1321 - இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
    வல்ல தவரளிக்கும் ஆறு.

    எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.

    Although there be no fault in him, the sweetness of his love
    Hath power in me a fretful jealousy to move.


    Explanation: Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.


    1322 - ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.

    காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.

    My 'anger feigned' gives but a little pain;
    And when affection droops, it makes it bloom again.


    Explanation: His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.


    1323 - புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து.

    நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

    Is there a bliss in any world more utterly divine,
    Than 'coyness' gives, when hearts as earth and water join?


    Explanation: Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?


    1324 - புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.

    இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

    'Within the anger feigned' that close love's tie doth bind,
    A weapon lurks, which quite breaks down my mind.


    Explanation: In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.


    1325 - தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து.

    தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

    Though free from fault, from loved one's tender arms
    To be estranged a while hath its own special charms.


    Explanation: Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.


    1326 - உணலினும் உண்ட தறலினிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது.

    உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

    'Tis sweeter to digest your food than 'tis to eat;
    In love, than union's self is anger feigned more sweet.


    Explanation: To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.


    1327 - ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்.

    ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

    In lovers' quarrels, 'tis the one that first gives way,
    That in re-union's joy is seen to win the day.


    Explanation: Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).


    1328 - ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.

    நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?

    And shall we ever more the sweetness know of that embrace
    With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.


    Explanation: Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?


    1329 - ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா.

    ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

    Let her, whose jewels brightly shine, aversion feign!
    That I may still plead on, O night, prolong thy reign!


    Explanation: May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!


    1330 - ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.

    ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

    A 'feigned aversion' coy to pleasure gives a zest;
    The pleasure's crowned when breast is clasped to breast.

No comments:

Post a Comment