திருக்குறள் தமிழ் விளக்கத்துடன்
Thirukural with Meaning in Tamil
Thirukural with Meaning in Tamil
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பொருள் செயல்வகை
Thirukural - Chapter 76
751 - பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.
Explanation: Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
752 - இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.
Explanation: All despise the poor; (but) all praise the rich.
753 - பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.
Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.
Explanation: The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
754 - அறனீனும் இன்பமும் ஈ.னும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.
Explanation: The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
755 - அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.
Explanation: (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
756 - உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.
Explanation: Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
757 - அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.
Explanation: The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
758 - குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.
As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.
Explanation: An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.
759 - செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்.
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.
Explanation: Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
760 - ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈ.ட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: படைமாட்சி
Thirukural - Chapter 77
761 - உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்.
A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.
Explanation: The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
762 - உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.
Explanation: Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.
763 - ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.
Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!
Explanation: What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
764 - அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.
Explanation: That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
765 - கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.
That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.
Explanation: That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
766 - மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.
Explanation: Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
767 - தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.
Explanation: That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).
768 - அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.
Explanation: Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.
769 - சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.
Explanation: An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
770 - நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: படைச்செருக்கு
Thirukural - Chapter 78
771 - என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்.
போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்.
Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!
Explanation: O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.
772 - கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.
Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.
Explanation: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.
773 - பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.
Explanation: The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.
774 - கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.
Explanation: The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).
775 - விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.
To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.
Explanation: Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?
776 - விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து.
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.
The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.
Explanation: The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.
777 - சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.
Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.
Explanation: The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).
778 - உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.
Explanation: The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).
779 - இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.
Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?
Explanation: Who would reproach with failure those who seal their oath with their death ?
780 - புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.
If monarch's eyes o'erflow with tears for hero slain,
Who would not beg such boon of glorious death to gain?
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: நட்பு
Thirukural - Chapter 79
781 - செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?
Explanation: What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?
782 - நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
Explanation: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
783 - நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.
Explanation: Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
784 - நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.
Explanation: Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
785 - புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.
Explanation: Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.
786 - முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.
Explanation: The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
787 - அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.
Explanation: (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
788 - உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
Explanation: (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
789 - நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.
And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.
Explanation: Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
790 - இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.
Mean is the friendship that men blazon forth,
'He's thus to me' and 'such to him my worth'.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: நட்பாராய்தல்
Thirukural - Chapter 80
791 - நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.
Explanation: As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
792 - ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.
Explanation: The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
793 - குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.
Explanation: Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
794 - குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so you as friend that man may claim.
Explanation: The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
795 - அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.
Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.
Explanation: You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
796 - கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.
Explanation: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.
797 - ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.
Explanation: It is indead a gain for one to renounce the friendship of fools.
798 - உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.
Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.
Explanation: Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
799 - கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.
Explanation: The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.
800 - மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
Renounce alliance with the men of evil way.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பழைமை
Thirukural - Chapter 81
801 - பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act.
Explanation: Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
802 - நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.
Explanation: The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
803 - பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை.
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.
When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?
Explanation: Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
804 - விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.
Explanation: If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
805 - பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.
Explanation: If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
806 - எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.
Explanation: Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
807 - அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.
Explanation: Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
808 - கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.
In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.
Explanation: To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
809 - கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.
Friendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends.
Explanation: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
810 - விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: தீ நட்பு
Thirukural - Chapter 82
811 - பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.
Explanation: The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.
812 - உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?
Explanation: Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?
813 - உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.
Explanation: Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
814 - அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.
A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.
Explanation: Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
815 - செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.
Explanation: It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
816 - பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.
Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.
Explanation: The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
817 - நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.
Explanation: What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
818 - ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.
Explanation: Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
819 - கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.
E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.
Explanation: The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
820 - எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.
In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: கூடா நட்பு
Thirukural - Chapter 83
821 - சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.
Explanation: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
822 - இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.
Explanation: The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
823 - பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.
Explanation: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.
824 - முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.
Explanation: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
825 - மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.
Explanation: In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
826 - நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.
Explanation: Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
827 - சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.
To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!
Explanation: Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.
828 - தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
Explanation: A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
829 - மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.
Explanation: It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
830 - பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்.
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பேதைமை
Thirukural - Chapter 84
831 - பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்.
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!
Explanation: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
832 - பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.
Explanation: The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
833 - நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, 'tis thus the fool will play his part.
Explanation: Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
834 - ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்.
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found?
Explanation: There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
835 - ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.
The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.
Explanation: A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
836 - பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.
Explanation: If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.
837 - ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.
Explanation: If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
838 - மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.
Explanation: A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.
839 - பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.
Explanation: The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
840 - கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.
Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: புல்லறிவாண்மை
Thirukural - Chapter 85
841 - அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.
Explanation: The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
842 - அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.
Explanation: (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
843 - அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.
With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring.
Explanation: The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
844 - வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'
Explanation: What is called want of wisdom is the vanity which says, "We are wise".
845 - கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.
Explanation: Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
846 - அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.
Explanation: Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
847 - அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.
Explanation: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
848 - ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
Advised, he heeds not; of himself knows nothing wise;
This man's whole life is all one plague until he dies.
Explanation: The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
849 - காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.
Explanation: One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
850 - உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: இகல்
Thirukural - Chapter 86
851 - இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
Hostility disunion's plague will bring,
That evil quality, to every living thing.
Explanation: The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
852 - பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.
Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.
Explanation: Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
853 - இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.
Explanation: To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
854 - இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.
Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.
Explanation: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
855 - இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.
If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?
Explanation: Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?
856 - இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.
Explanation: Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
857 - மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.
The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.
Explanation: Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
858 - இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
'Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery.
Explanation: Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
859 - இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.
Explanation: At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.
860 - இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.
From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பகைமாட்சி
Thirukural - Chapter 87
861 - வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.
Explanation: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
862 - அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?
Explanation: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?
863 - அஞ்சும் அறியான் அமைவிலன் ஈ.கலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.
Explanation: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
864 - நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.
His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.
Explanation: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
865 - வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.
Explanation: (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
866 - காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.
Explanation: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
867 - கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.
Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy!
Explanation: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
868 - குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து.
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim.
Explanation: He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
869 - செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.
Explanation: There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
870 - கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பகைத்திறந் தெரிதல்
Thirukural - Chapter 88
871 - பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.
Explanation: The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
872 - வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!
Explanation: Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
873 - ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.
Explanation: He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
874 - பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.
The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.
Explanation: The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
875 - தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
Explanation: He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
876 - தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்.
Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.
Explanation: Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
877 - நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.
Explanation: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
878 - வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.
Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.
Explanation: The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
879 - இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.
Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
Explanation: A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
880 - உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.
But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: உட்பகை
Thirukural - Chapter 89
881 - நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.
Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.
Explanation: Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.
882 - வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!
Explanation: Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
883 - உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
Of hidden hate beware, and guard thy life;
In troublous time 'twill deeper wound than potter's knife.
Explanation: Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.
884 - மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.
Explanation: The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.
885 - உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
Amid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise.
Explanation: If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
886 - ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.
Explanation: If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
887 - செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
As casket with its cover, though in one they live alway,
No union to the house where hate concealed hath sway.
Explanation: Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
888 - அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி.
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.
As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.
Explanation: A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
889 - எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.
Explanation: Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
890 - உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று.
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.
Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பெரியாரைப் பிழையாமை
Thirukural - Chapter 90
891 - ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.
Explanation: Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
892 - பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill.
Explanation: To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
893 - கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.
Who ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might.
Explanation: If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
894 - கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்.
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.
When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
Explanation: The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
895 - யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
Who dare the fiery wrath of monarchs dread,
Where'er they flee, are numbered with the dead.
Explanation: Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
896 - எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.
Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence.
Explanation: Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
897 - வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.
Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?
Explanation: If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
898 - குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.
Explanation: If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
899 - ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.
Explanation: If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
900 - இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: பெண்வழிச் சேறல்
Thirukural - Chapter 91
901 - மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
Explanation: Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
902 - பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.
Explanation: The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;
903 - இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.
Explanation: The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
904 - மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
Explanation: The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
905 - இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.
Explanation: He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
906 - இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்.
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm.
Explanation: They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
907 - பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman's law who dwells.
Explanation: Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
908 - நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.
Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.
Explanation: Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
909 - அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.
Explanation: From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
910 - எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: வரைவின் மகளிர்
Thirukural - Chapter 92
911 - அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.
Explanation: The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
912 - பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.
Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.
Explanation: One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).
913 - பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!
Explanation: The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
914 - பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.
Explanation: The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.
915 - பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.
From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee;
Explanation: Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
916 - தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.
Explanation: Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
917 - நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace.
Explanation: Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
918 - ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்.
As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove.
Explanation: The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.
919 - வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.
Explanation: The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
920 - இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.
Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: கள்ளுண்ணாமை
Thirukural - Chapter 93
921 - உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.
Explanation: Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
922 - உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation: Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
923 - ஈ.ன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?
Explanation: Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?
924 - நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.
Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.
Explanation: The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
925 - கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.
Explanation: To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).
926 - துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
Explanation: They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
927 - உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.
Explanation: Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
928 - களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation: Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
929 - களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.
Explanation: Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
930 - கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: சூது
Thirukural - Chapter 94
931 - வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.
Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.
Explanation: Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
932 - ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?
Explanation: Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
933 - உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.
If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.
Explanation: If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
934 - சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்.
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
Explanation: There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
935 - கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.
Explanation: Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).
936 - அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.
Explanation: Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
937 - பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.
Explanation: To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
938 - பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது.
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.
Explanation: Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
939 - உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.
Clothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler's gain who sets his heart.
Explanation: The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
940 - இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.
Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.
திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: மருந்து
Thirukural - Chapter 95
941 - மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation: If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
942 - மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
No need of medicine to heal your body's pain,
If, what you ate before digested well, you eat again.
Explanation: No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
943 - அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.
Explanation: If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
944 - அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
Knowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree.
Explanation: (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
945 - மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel.
Explanation: There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.
946 - இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை.
On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.
Explanation: As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
947 - தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
Who largely feeds, nor measure of the fire within maintains,
That thoughtless man shall feel unmeasured pains.
Explanation: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
948 - நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill.
Explanation: Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
949 - உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.
Explanation: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
950 - உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.
திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: குடிமை
Thirukural - Chapter 96
951 - இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.
Explanation: Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
952 - ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
In these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought.
Explanation: The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
953 - நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
முகமலர்ச்சி, ஈ.கைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.
Explanation: A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
954 - அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.
Explanation: Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
955 - வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று.
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.
Explanation: Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
956 - சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
Whose minds are set to live as fits their sire's unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame.
Explanation: Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
957 - குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.
Explanation: The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
958 - நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
If lack of love appear in those who bear some goodly name,
'Twill make men doubt the ancestry they claim.
Explanation: If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
959 - நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.
Explanation: As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).
960 - நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.
திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: மானம்
Thirukural - Chapter 97
961 - இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.
Explanation: Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
962 - சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.
Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation: Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
963 - பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation: In great prosperity humility is becoming; dignity, in great adversity.
964 - தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.
Explanation: They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
965 - குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.
Explanation: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
966 - புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?
Explanation: Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
967 - ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.
Explanation: It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
968 - மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?
Explanation: For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
969 - மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.
Explanation: Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
970 - இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!
திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: பெருமை
Thirukural - Chapter 98
971 - ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்.
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
The light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.'
Explanation: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)
972 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.
Explanation: All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
973 - மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.
Explanation: Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
974 - ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
Explanation: Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
975 - பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்.
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.
Explanation: (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
976 - சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.
Explanation: It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
977 - இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்.
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
Explanation: Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
978 - பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.
Explanation: The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
979 - பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.
Explanation: Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
980 - அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.
திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: சான்றாண்மை
Thirukural - Chapter 99
981 - கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.
Explanation: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.
982 - குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.
Explanation: The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
983 - அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
984 - கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.
Explanation: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
985 - ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.
Explanation: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.
986 - சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.
Explanation: The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
987 - இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?
What fruit doth your perfection yield you, say!
Unless to men who work you ill good repay?
Explanation: Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
988 - இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.
Explanation: Poverty is no disgrace to one who abounds in good qualities.
989 - ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.
Explanation: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
990 - சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.
திருக்குறள் :: பொருட்பால் :: ஒழிபியல் :: பண்புடைமை
Thirukural - Chapter 100
991 - எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.
Explanation: If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.
992 - அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.
Explanation: Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.
993 - உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.
Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.
994 - நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு.
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence.'
Explanation: The world applauds the character of those whose usefulness results from their equity and charity.
995 - நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.
Explanation: Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
996 - பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.
Explanation: The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.
997 - அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane'.
Explanation: He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.
998 - நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
Explanation: It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
999 - நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
Explanation: To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.
1000 - பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.
Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored.

No comments:
Post a Comment