Saturday, December 11, 2010

திருக்குறள் - III - திருக்குறள் தமிழ் விளக்கத்துடன்

திருக்குறள் தமிழ் விளக்கத்துடன்


Thirukural with Meaning in Tamil

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: தெரிந்துதெளிதல்

Thirukural - Chapter 51

501 - அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.

    அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

    How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
    Comports himself? This four-fold test of man will full assurance make.


    Explanation: Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.


    502 - குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் கட்டே தெளிவு.

    குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

    Of noble race, of faultless worth, of generous pride
    That shrinks from shame or stain; in him may king confide.


    Explanation: (The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).


    503 - அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.

    அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

    Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
    When closely scanned, a man from all unwisdom free.


    Explanation: When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.


    504 - குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

    ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

    Weigh well the good of each, his failings closely scan,
    As these or those prevail, so estimate the man.


    Explanation: Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.


    505 - பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்.

    ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    Of greatness and of meanness too,
    The deeds of each are touchstone true.


    Explanation: A man's deeds are the touchstone of his greatness and littleness.


    506 - அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.

    நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

    Beware of trusting men who have no kith of kin;
    No bonds restrain such men, no shame deters from sin.


    Explanation: Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.


    507 - காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்.

    அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

    By fond affection led who trusts in men of unwise soul,
    Yields all his being up to folly's blind control.


    Explanation: To choose ignorant men, through partiality, is the height of folly.


    508 - தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்.

    ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

    Who trusts an untried stranger, brings disgrace,
    Remediless, on all his race.


    Explanation: Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.


    509 - தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.

    நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

    Trust no man whom you have not fully tried,
    When tested, in his prudence proved confide.


    Explanation: Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.


    510 - தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்.

    ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

    Trust where you have not tried, doubt of a friend to feel,
    Once trusted, wounds inflict that nought can heal.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: தெரிந்து வினையாடல்

Thirukural - Chapter 52

511 - நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்.

    நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

    Who good and evil scanning, ever makes the good his joy;
    Such man of virtuous mood should king employ.


    Explanation: He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.


    512 - வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
    ஆராய்வான் செய்க வினை.

    வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

    Who swells the revenues, spreads plenty o'er the land,
    Seeks out what hinders progress, his the workman's hand.


    Explanation: Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).


    513 - அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.

    அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

    A loyal love with wisdom, clearness, mind from avarice free;
    Who hath these four good gifts should ever trusted be.


    Explanation: Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.


    514 - எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.

    எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

    Even when tests of every kind are multiplied,
    Full many a man proves otherwise, by action tried!


    Explanation: Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).


    515 - அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
    சிறந்தானென் றேவற்பாற் றன்று.

    ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

    No specious fav'rite should the king's commission bear,
    But he that knows, and work performs with patient care.


    Explanation: (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.


    516 - செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த உணர்ந்து செயல்.

    செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

    Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
    Of hour befitting both assured, let every work proceed.


    Explanation: Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.


    517 - இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்.

    ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    'This man, this work shall thus work out,' let thoughtful king command;
    Then leave the matter wholly in his servant's hand.


    Explanation: After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.


    518 - வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.

    ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

    As each man's special aptitude is known,
    Bid each man make that special work his own.


    Explanation: Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.


    519 - வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு.

    எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

    Fortune deserts the king who ill can bear,
    Informal friendly ways of men his tolls who share.


    Explanation: Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.


    520 - நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு.

    உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

    Let king search out his servants' deeds each day;
    When these do right, the world goes rightly on its way.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: சுற்றந்தழால்

Thirukural - Chapter 53

521 - பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.

    ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

    When wealth is fled, old kindness still to show,
    Is kindly grace that only kinsmen know.


    Explanation: Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).


    522 - விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவுந் தரும்.

    எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

    The gift of kin's unfailing love bestows
    Much gain of good, like flower that fadeless blows.


    Explanation: If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.


    523 - அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று.

    உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

    His joy of life who mingles not with kinsmen gathered round,
    Is lake where streams pour in, with no encircling bound.


    Explanation: The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.


    524 - சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்.

    தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

    The profit gained by wealth's increase,
    Is living compassed round by relatives in peace.


    Explanation: To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.


    525 - கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்.

    வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

    Who knows the use of pleasant words, and liberal gifts can give,
    Connections, heaps of them, surrounding him shall live.


    Explanation: He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.


    526 - பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத் தில்.

    பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

    Than one who gifts bestows and wrath restrains,
    Through the wide world none larger following gains.


    Explanation: No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.


    527 - காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.

    தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

    The crows conceal not, call their friends to come, then eat;
    Increase of good such worthy ones shall meet.


    Explanation: The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).


    528 - பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.

    அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

    Where king regards not all alike, but each in his degree,
    'Neath such discerning rule many dwell happily.


    Explanation: Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.


    529 - தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரண மின்றி வரும்.

    உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

    Who once were his, and then forsook him, as before
    Will come around, when cause of disagreement is no more.


    Explanation: Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.


    530 - உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந் தெண்ணிக் கொளல்.

    ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

    Who causeless went away, then to return, for any cause, ask leave;
    The king should sift their motives well, consider, and receive!

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: பொச்சாவாமை

Thirukural - Chapter 54

531 - இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

    அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

    'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
    Bring self-forgetfulness than if transcendent wrath control.


    Explanation: More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.


    532 - பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

    நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

    Perpetual, poverty is death to wisdom of the wise;
    When man forgets himself his glory dies!


    Explanation: Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.


    533 - பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
    தெப்பானூ லோர்க்குந் துணிவு.

    மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

    'To self-oblivious men no praise'; this rule
    Decisive wisdom sums of every school.


    Explanation: Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.


    534 - அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு.

    பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

    'To cowards is no fort's defence'; e'en so
    The self-oblivious men no blessing know.


    Explanation: Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).


    535 - முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
    பின்னூ றிரங்கி விடும்.

    முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

    To him who nought foresees, recks not of anything,
    The after woe shall sure repentance bring.


    Explanation: The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.


    536 - இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்ப தில்.

    ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

    Towards all unswerving, ever watchfulness of soul retain,
    Where this is found there is no greater gain.


    Explanation: There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.


    537 - அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
    கருவியாற் போற்றிச் செயின்.

    மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

    Though things are arduous deemed, there's nought may not be won,
    When work with mind's unslumbering energy and thought is done.


    Explanation: There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.


    538 - புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
    திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.

    புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

    Let things that merit praise thy watchful soul employ;
    Who these despise attain through sevenfold births no joy.


    Explanation: Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.


    539 - இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

    மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

    Think on the men whom scornful mind hath brought to nought,
    When exultation overwhelms thy wildered thought.


    Explanation: Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.


    540 - உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளிய துள்ளப் பெறின்.

    கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

    'Tis easy what thou hast in mind to gain,
    If what thou hast in mind thy mind retain.

 திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: செங்கோன்மை

Thirukural - Chapter 55

541 - ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை.

    குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

    Search out, to no one favour show; with heart that justice loves
    Consult, then act; this is the rule that right approves.


    Explanation: To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.


    542 - வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி.

    உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

    All earth looks up to heav'n whence raindrops fall;
    All subjects look to king that ruleth all.


    Explanation: When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.


    543 - அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.

    ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

    Learning and virtue of the sages spring,
    From all-controlling sceptre of the king.


    Explanation: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.


    544 - குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.

    குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

    Whose heart embraces subjects all, lord over mighty land
    Who rules, the world his feet embracing stands.


    Explanation: The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.


    545 - இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
    பெயலும் விளையுளுந் தொக்கு.

    நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

    Where king, who righteous laws regards, the sceptre wields,
    There fall the showers, there rich abundance crowns the fields.


    Explanation: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.


    546 - வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.

    ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

    Not lance gives kings the victory,
    But sceptre swayed with equity.


    Explanation: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.


    547 - இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்.

    நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

    The king all the whole realm of earth protects;
    And justice guards the king who right respects.


    Explanation: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.


    548 - எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.

    ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

    Hard of access, nought searching out, with partial hand
    The king who rules, shall sink and perish from the land.


    Explanation: The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.


    549 - குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.

    குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

    Abroad to guard, at home to punish, brings
    No just reproach; 'tis work assigned to kings.


    Explanation: In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.


    550 - கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.

    கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

    By punishment of death the cruel to restrain,
    Is as when farmer frees from weeds the tender grain.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: கொடுங்கோன்மை

Thirukural - Chapter 56

551 - கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
    டல்லவை செய்தொழுகும் வேந்து.

    அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

    Than one who plies the murderer's trade, more cruel is the king
    Who all injustice works, his subjects harassing.


    Explanation: The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.


    552 - வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.

    ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

    As 'Give' the robber cries with lance uplift,
    So kings with sceptred hand implore a gift.


    Explanation: The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".


    553 - நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.

    ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

    Who makes no daily search for wrongs, nor justly rules, that king
    Doth day by day his realm to ruin bring.


    Explanation: The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.


    554 - கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு.

    நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

    Whose rod from right deflects, who counsel doth refuse,
    At once his wealth and people utterly shall lose.


    Explanation: The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.


    555 - அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.

    கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

    His people's tears of sorrow past endurance, are not they
    Sharp instruments to wear the monarch's wealth away?


    Explanation: Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?


    556 - மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.

    நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

    To rulers' rule stability is sceptre right;
    When this is not, quenched is the rulers' light.


    Explanation: Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.


    557 - துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.

    மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

    As lack of rain to thirsty lands beneath,
    Is lack of grace in kings to all that breathe.


    Explanation: As is the world without rain, so live a people whose king is without kindness.


    558 - இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.

    வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

    To poverty it adds a sharper sting,
    To live beneath the sway of unjust king.


    Explanation: Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.


    559 - முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.

    முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

    Where king from right deflecting, makes unrighteous gain,
    The seasons change, the clouds pour down no rain.


    Explanation: If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.


    560 - ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.

    ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

    Where guardian guardeth not, udder of kine grows dry,
    And Brahmans' sacred lore will all forgotten lie.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: வெருவந்த செய்யாமை

Thirukural - Chapter 57

561 - தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து.

    நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

    Who punishes, investigation made in due degree,
    So as to stay advance of crime, a king is he.


    Explanation: He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.


    562 - கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.

    குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

    For length of days with still increasing joys on Heav'n who call,
    Should raise the rod with brow severe, but let it gently fall.


    Explanation: Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.


    563 - வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

    குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

    Where subjects dread of cruel wrongs endure,
    Ruin to unjust king is swift and sure.


    Explanation: The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.


    564 - இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.

    கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

    'Ah! cruel is our king', where subjects sadly say,
    His age shall dwindle, swift his joy of life decay.


    Explanation: The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.


    565 - அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து.

    யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

    Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
    His ample wealth shall waste, blasted by demon's glance.


    Explanation: The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.


    566 - கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்.

    கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

    The tyrant, harsh in speach and hard of eye,
    His ample joy, swift fading, soon shall die.


    Explanation: The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.


    567 - கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்.

    கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

    Harsh words and punishments severe beyond the right,
    Are file that wears away the monarch's conquering might.


    Explanation: Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).


    568 - இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு.

    கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

    Who leaves the work to those around, and thinks of it no more;
    If he in wrathful mood reprove, his prosperous days are o'er!


    Explanation: The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.


    569 - செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.

    முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

    Who builds no fort whence he may foe defy,
    In time of war shall fear and swiftly die.


    Explanation: The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.


    570 - கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை.

    கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

    Tyrants with fools their counsels share:
    Earth can no heavier burthen bear!

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: கண்ணோட்டம்

Thirukural - Chapter 58

571 - கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு.

    இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

    Since true benignity, that grace exceeding great, resides
    In kingly souls, world in happy state abides.


    Explanation: The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.


    572 - கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை.

    அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

    The world goes on its wonted way, since grace benign is there;
    All other men are burthen for the earth to bear.


    Explanation: The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.


    573 - பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
    கண்ணோட்டம் இல்லாத கண்.

    இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

    Where not accordant with the song, what use of sounding chords?
    What gain of eye that no benignant light affords?


    Explanation: Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.


    574 - உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
    கண்ணோட்டம் இல்லாத கண்.

    அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

    The seeming eye of face gives no expressive light,
    When not with duly meted kindness bright.


    Explanation: Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?


    575 - கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
    புண்ணென் றுணரப் படும்.

    கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

    Benignity is eyes' adorning grace;
    Without it eyes are wounds disfiguring face.


    Explanation: Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.


    576 - மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைடந்துகண் ணோடா தவர்.

    ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

    Whose eyes 'neath brow infixed diffuse no ray
    Of grace; like tree in earth infixed are they.


    Explanation: They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).


    577 - கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்.

    கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

    Eyeless are they whose eyes with no benignant lustre shine;
    Who've eyes can never lack the light of grace benign.


    Explanation: Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.


    578 - கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
    குரிமை உடைத்திவ் வுலகு.

    கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

    Who can benignant smile, yet leave no work undone;
    By them as very own may all the earth be won.


    Explanation: The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).


    579 - ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை.

    அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

    To smile on those that vex, with kindly face,
    Enduring long, is most excelling grace.


    Explanation: Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.


    580 - பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.

    கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

    They drink with smiling grace, though poison interfused they see,
    Who seek the praise of all-esteemed courtesy.


திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: ஒற்றாடல்

Thirukural - Chapter 59

581 - ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.

    நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

    These two: the code renowned and spies,
    In these let king confide as eyes.


    Explanation: Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.


    582 - எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.

    நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

    Each day, of every subject every deed,
    'Tis duty of the king to learn with speed.


    Explanation: It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.


    583 - ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்த தில்.

    நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

    By spies who spies, not weighing things they bring,
    Nothing can victory give to that unwary king.


    Explanation: There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.


    584 - வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
    கனைவரையும் ஆராய்வ தொற்று.

    ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

    His officers, his friends, his enemies,
    All these who watch are trusty spies.


    Explanation: He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.


    585 - கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.

    சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

    Of unsuspected mien and all-unfearing eyes,
    Who let no secret out, are trusty spies.


    Explanation: A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).


    586 - துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
    தென்செயினுஞ் சோர்வில தொற்று.

    ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

    As monk or devotee, through every hindrance making way,
    A spy, whate'er men do, must watchful mind display.


    Explanation: He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.


    587 - மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பா டில்லதே ஒற்று.

    மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

    A spy must search each hidden matter out,
    And full report must render, free from doubt.


    Explanation: A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.


    588 - ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

    ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

    Spying by spies, the things they tell
    To test by other spies is well.


    Explanation: Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.


    589 - ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்.

    ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

    One spy must not another see: contrive it so;
    And things by three confirmed as truth you know.


    Explanation: Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.


    590 - சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
    புறப்படுத்தான் ஆகும் மறை.

    ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

    Reward not trusty spy in others' sight,
    Or all the mystery will come to light.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: ஊக்கமுடைமை

Thirukural - Chapter 60

591 - உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
    உடைய துடையரோ மற்று.

    ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

    'Tis energy gives men o'er that they own a true control;
    They nothing own who own not energy of soul.


    Explanation: Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?


    592 - உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.

    ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

    The wealth of mind man owns a real worth imparts,
    Material wealth man owns endures not, utterly departs.


    Explanation: The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.


    593 - ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்.

    ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

    'Lost is our wealth,' they utter not this cry distressed,
    The men of firm concentred energy of soul possessed.


    Explanation: They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."


    594 - ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.

    உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

    The man of energy of soul inflexible,
    Good fortune seeks him out and comes a friend to dwell.


    Explanation: Wealth will find its own way to the man of unfailing energy.


    595 - வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு.

    தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

    With rising flood the rising lotus flower its stem unwinds;
    The dignity of men is measured by their minds.


    Explanation: The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.


    596 - உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

    நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

    Whate'er you ponder, let your aim be loftly still,
    Fate cannot hinder always, thwart you as it will.


    Explanation: In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.


    597 - சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.

    உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

    The men of lofty mind quail not in ruin's fateful hour,
    The elephant retains his dignity mind arrows' deadly shower.


    Explanation: The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.


    598 - உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.

    அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

    The soulless man can never gain
    Th' ennobling sense of power with men.


    Explanation: Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".


    599 - பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்.

    உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

    Huge bulk of elephant with pointed tusk all armed,
    When tiger threatens shrinks away alarmed!


    Explanation: Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.


    600 - உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு.

    மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

    Firmness of soul in man is real excellance;
    Others are trees, their human form a mere pretence.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: மடியின்மை

Thirukural - Chapter 61

601 - குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்.

    பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

    Of household dignity the lustre beaming bright,
    Flickers and dies when sluggish foulness dims its light.


    Explanation: By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.


    602 - மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.

    குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    Let indolence, the death of effort, die,
    If you'd uphold your household's dignity.


    Explanation: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.


    603 - மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து.

    அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

    Who fosters indolence within his breast, the silly elf!
    The house from which he springs shall perish ere himself.


    Explanation: The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.


    604 - குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு.

    சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

    His family decays, and faults unheeded thrive,
    Who, sunk in sloth, for noble objects doth not strive.


    Explanation: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.


    605 - நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.

    காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

    Delay, oblivion, sloth, and sleep: these four
    Are pleasure-boat to bear the doomed to ruin's shore.


    Explanation: Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.


    606 - படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.

    தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

    Though lords of earth unearned possessions gain,
    The slothful ones no yield of good obtain.


    Explanation: It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.


    607 - இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்.

    முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

    Who hug their sloth, nor noble works attempt,
    Shall bear reproofs and words of just contempt.


    Explanation: Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.


    608 - மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்.

    பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

    If sloth a dwelling find mid noble family,
    Bondsmen to them that hate them shall they be.


    Explanation: If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.


    609 - குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.

    தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

    Who changes slothful habits saves
    Himself from all that household rule depraves.


    Explanation: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.


    610 - மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.

    சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

    The king whose life from sluggishness is rid,
    Shall rule o'er all by foot of mighty god bestrid.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: ஆள்வினையுடைமை

Thirukural - Chapter 62

611 - அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

    Say not, 'Tis hard', in weak, desponding hour,
    For strenuous effort gives prevailing power.


    Explanation: Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).


    612 - வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

    எந்தச் செயலில் ஈ.டுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

    In action be thou, 'ware of act's defeat;
    The world leaves those who work leave incomplete!


    Explanation: Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.


    613 - தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.

    பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

    In strenuous effort doth reside
    The power of helping others: noble pride!


    Explanation: The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.


    614 - தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.

    ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

    Beneficent intent in men by whom no strenuous work is wrought,
    Like battle-axe in sexless being's hand availeth nought.


    Explanation: The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.


    615 - இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.

    தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

    Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
    He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.


    Explanation: He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.


    616 - முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.

    முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

    Effort brings fortune's sure increase,
    Its absence brings to nothingness.


    Explanation: Labour will produce wealth; idleness will bring poverty.


    617 - மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்.

    திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

    In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;
    Where man unslothful toils, she of the lotus flower is there!


    Explanation: They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.


    618 - பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி.

    விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

    'Tis no reproach unpropitious fate should ban;
    But not to do man's work is foul disgrace to man!


    Explanation: Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.


    619 - தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

    கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

    Though fate-divine should make your labour vain;
    Effort its labour's sure reward will gain.


    Explanation: Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.


    620 - ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்.

    ``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

    Who strive with undismayed, unfaltering mind,
    At length shall leave opposing fate behind.

திருக்குறள் :: பொருட்பால் :: அரசியல் :: இடுக்கண் அழியாமை

Thirukural - Chapter 63

621 - இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

    சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

    Smile, with patient, hopeful heart, in troublous hour;
    Meet and so vanquish grief; nothing hath equal power.


    Explanation: If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.


    622 - வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.

    வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

    Though sorrow, like a flood, comes rolling on,
    When wise men's mind regards it,- it is gone.


    Explanation: A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.


    623 - இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்.

    துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

    Who griefs confront with meek, ungrieving heart,
    From them griefs, put to grief, depart.


    Explanation: They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.


    624 - மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.

    தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

    Like bullock struggle on through each obstructed way;
    From such an one will troubles, troubled, roll away.


    Explanation: Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.


    625 - அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.

    துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

    When griefs press on, but fail to crush the patient heart,
    Then griefs defeated, put to grief, depart.


    Explanation: The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).


    626 - அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்.

    இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

    Who boasted not of wealth, nor gave it all their heart,
    Will not bemoan the loss, when prosperous days depart.


    Explanation: Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.


    627 - இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்.

    துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

    'Man's frame is sorrow's target', the noble mind reflects,
    Nor meets with troubled mind the sorrows it expects.


    Explanation: The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.


    628 - இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்.

    இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

    He seeks not joy, to sorrow man is born, he knows;
    Such man will walk unharmed by touch of human woes.


    Explanation: That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).


    629 - இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்.

    இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

    Mid joys he yields not heart to joys' control.
    Mid sorrows, sorrow cannot touch his soul.


    Explanation: He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.


    630 - இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

    துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

    Who pain as pleasure takes, he shall acquire
    The bliss to which his foes in vain aspire.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: அமைச்சு

Thirukural - Chapter 64

631 - கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு.

    உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

    A minister is he who grasps, with wisdom large,
    Means, time, work's mode, and functions rare he must discharge.


    Explanation: The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).


    632 - வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
    டைந்துடன் மாண்ட தமைச்சு.

    அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

    A minister must greatness own of guardian power, determined mind,
    Learn'd wisdom, manly effort with the former five combined.


    Explanation: The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.


    633 - பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு.

    அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.

    A minister is he whose power can foes divide,
    Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.


    Explanation: The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).


    634 - தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்ல தமைச்சு.

    ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

    A minister has power to see the methods help afford,
    To ponder long, then utter calm conclusive word.


    Explanation: The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).


    635 - அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

    அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.

    The man who virtue knows, has use of wise and pleasant words.
    With plans for every season apt, in counsel aid affords.


    Explanation: He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).


    636 - மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை.

    நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

    When native subtilty combines with sound scholastic lore,
    'Tis subtilty surpassing all, which nothing stands before.


    Explanation: What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.


    637 - செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
    தியற்கை அறிந்து செயல்.

    செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

    Though knowing all that books can teach, 'tis truest tact
    To follow common sense of men in act.


    Explanation: Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.


    638 - அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.

    சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

    'Tis duty of the man in place aloud to say
    The very truth, though unwise king may cast his words away.


    Explanation: Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.


    639 - பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்.

    தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

    A minister who by king's side plots evil things
    Worse woes than countless foemen brings.


    Explanation: Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.


    640 - முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
    திறப்பா டிலாஅ தவர்.

    முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

    For gain of end desired just counsel nought avails
    To minister, when tact in execution fails.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: சொல்வன்மை

Thirukural - Chapter 65

641 - நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத் துள்ளதூஉம் அன்று.

    சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

    A tongue that rightly speaks the right is greatest gain,
    It stands alone midst goodly things that men obtain.


    Explanation: The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.


    642 - ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

    ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

    Since gain and loss in life on speech depend,
    From careless slip in speech thyself defend.


    Explanation: Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.


    643 - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.

    கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

    'Tis speech that spell-bound holds the listening ear,
    While those who have not heard desire to hear.


    Explanation: The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).


    644 - திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்.

    காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

    Speak words adapted well to various hearers' state;
    No higher virtue lives, no gain more surely great.


    Explanation: Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.


    645 - சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

    இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

    Speak out your speech, when once 'tis past dispute
    That none can utter speech that shall your speech refute.


    Explanation: Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.


    646 - வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்.

    மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

    Charming each hearer's ear, of others' words to seize the sense,
    Is method wise of men of spotless excellence.


    Explanation: It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.


    647 - சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

    சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

    Mighty in word, of unforgetful mind, of fearless speech,
    'Tis hard for hostile power such man to overreach.


    Explanation: It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.


    648 - விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

    வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

    Swiftly the listening world will gather round,
    When men of mighty speech the weighty theme propound.


    Explanation: If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.


    649 - பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.

    குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

    Who have not skill ten faultless words to utter plain,
    Their tongues will itch with thousand words man's ears to pain.


    Explanation: They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.


    650 - இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரிந்துரையா தார்.

    கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

    Like scentless flower in blooming garland bound
    Are men who can't their lore acquired to other's ears expound.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: வினைத்தூய்மை

Thirukural - Chapter 66

651 - துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.

    ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.

    The good external help confers is worldly gain;
    By action good men every needed gift obtain.


    Explanation: The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.


    652 - என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை.

    புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

    From action evermore thyself restrain
    Of glory and of good that yields no gain.


    Explanation: Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).


    653 - ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
    ஆஅது மென்னு மவர்.

    மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

    Who tell themselves that nobler things shall yet be won
    All deeds that dim the light of glory must they shun.


    Explanation: Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).


    654 - இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.

    தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈ.டுபட மாட்டார்கள்.

    Though troubles press, no shameful deed they do,
    Whose eyes the ever-during vision view.


    Explanation: Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).


    655 - எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.

    `என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

    Do nought that soul repenting must deplore,
    If thou hast sinned, 'tis well if thou dost sin no more.


    Explanation: Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not.


    656 - ஈ.ன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.

    பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈ.டுபடக்கூடாது.

    Though her that bore thee hung'ring thou behold, no deed
    Do thou, that men of perfect soul have crime decreed.


    Explanation: Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).


    657 - பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

    Than store of wealth guilt-laden souls obtain,
    The sorest poverty of perfect soul is richer gain.


    Explanation: Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.


    658 - கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.

    தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

    To those who hate reproof and do forbidden thing.
    What prospers now, in after days shall anguish bring.


    Explanation: The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.


    659 - அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பா லவை.

    பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

    What's gained through tears with tears shall go;
    From loss good deeds entail harvests of blessings grow.


    Explanation: All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.


    660 - சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
    கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

    தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

    In pot of clay unburnt he water pours and would retain,
    Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: வினைத்திட்பம்

Thirukural - Chapter 67

661 - வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.

    மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

    What men call 'power in action' know for 'power of mind'
    Externe to man all other aids you find.


    Explanation: Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.


    662 - ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

    இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

    'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
    These two define your way, so those that search out truth declare.


    Explanation: Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.


    663 - கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்.

    செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    Man's fitting work is known but by success achieved;
    In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.


    Explanation: So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.


    664 - சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.

    சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

    Easy to every man the speech that shows the way;
    Hard thing to shape one's life by words they say!


    Explanation: To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.


    665 - வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.

    செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

    The power in act of men renowned and great,
    With king acceptance finds and fame through all the state.


    Explanation: The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).


    666 - எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.

    எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

    Whate'er men think, ev'n as they think, may men obtain,
    If those who think can steadfastness of will retain.


    Explanation: If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.


    667 - உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னார் உடைத்து.

    உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

    Despise not men of modest bearing; Look not at form, but what men are:
    For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!


    Explanation: Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.


    668 - கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.

    மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    What clearly eye discerns as right, with steadfast will,
    And mind unslumbering, that should man fulfil.


    Explanation: An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.


    669 - துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.

    இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

    Though toil and trouble face thee, firm resolve hold fast,
    And do the deeds that pleasure yield at last.


    Explanation: Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).


    670 - எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டா துலகு.

    எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

    The world desires not men of every power possessed,
    Who power in act desire not,- crown of all the rest.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: வினைசெயல்வகை

Thirukural - Chapter 68

671 - சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

    ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

    Resolve is counsel's end, If resolutions halt
    In weak delays, still unfulfilled, 'tis grievous fault.


    Explanation: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.


    672 - தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

    நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

    Slumber when sleepy work's in hand: beware
    Thou slumber not when action calls for sleepless care!


    Explanation: Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.


    673 - ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.

    இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

    When way is clear, prompt let your action be;
    When not, watch till some open path you see.


    Explanation: Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.


    674 - வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.

    எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

    With work or foe, when you neglect some little thing,
    If you reflect, like smouldering fire, 'twill ruin bring.


    Explanation: When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.


    675 - பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்.

    ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Treasure and instrument and time and deed and place of act:
    These five, till every doubt remove, think o'er with care exact.


    Explanation: Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.


    676 - முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.

    ஈ.டுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

    Accomplishment, the hindrances, large profits won
    By effort: these compare,- then let the work be done.


    Explanation: An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).


    677 - செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளங் கொளல்.

    ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

    Who would succeed must thus begin: first let him ask
    The thoughts of them who thoroughly know the task.


    Explanation: The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.


    678 - வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

    ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

    By one thing done you reach a second work's accomplishment;
    So furious elephant to snare its fellow brute is sent.


    Explanation: To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.


    679 - நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

    நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

    Than kindly acts to friends more urgent thing to do,
    Is making foes to cling as friends attached to you.


    Explanation: One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.


    680 - உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
    கொள்வர் பெரியார்ப் பணிந்து

    தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

    The men of lesser realm, fearing the people's inward dread,
    Accepting granted terms, to mightier ruler bow the head.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: தூது

Thirukural - Chapter 69

681 - அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

    அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

    Benevolence high birth, the courtesy kings love:-
    These qualities the envoy of a king approve.


    Explanation: The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.


    682 - அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
    கின்றி யமையாத மூன்று.

    தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

    Love, knowledge, power of chosen words, three things,
    Should he possess who speaks the words of kings.


    Explanation: Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.


    683 - நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
    வென்றி வினையுரைப்பான் பண்பு.

    வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

    Mighty in lore amongst the learned must he be,
    Midst jav'lin-bearing kings who speaks the words of victory.


    Explanation: To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).


    684 - அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு.

    தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

    Sense, goodly grace, and knowledge exquisite.
    Who hath these three for envoy's task is fit.


    Explanation: He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.


    685 - தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.

    சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

    In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
    An envoy he who gains advantage for his lord.


    Explanation: He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).


    686 - கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்க தறிவதாந் தூது.

    கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

    An envoy meet is he, well-learned, of fearless eye
    Who speaks right home, prepared for each emergency.


    Explanation: He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.


    687 - கடனறிந்து காலங் கருதி இடனறிந்
    தெண்ணி உரைப்பான் தலை.

    ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

    He is the best who knows what's due, the time considered well,
    The place selects, then ponders long ere he his errand tell.


    Explanation: He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.


    688 - தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.

    துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

    Integrity, resources, soul determined, truthfulness.
    Who rightly speaks his message must these marks possess.


    Explanation: The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.


    689 - விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
    வாய்சோரா வன்க ணவன்.

    ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

    His faltering lips must utter no unworthy thing,
    Who stands, with steady eye, to speak the mandates of his king.


    Explanation: He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).


    690 - இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
    குறுதி பயப்பதாம் தூது.

    தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

    Death to the faithful one his embassy may bring;
    To envoy gains assured advantage for his king.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: மன்னரைச் சேர்ந்தொழுதல்

Thirukural - Chapter 70

691 - அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

    முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

    Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
    Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.


    Explanation: Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.


    692 - மன்னர் விழைப விழையாமை மன்னரான்
    மன்னிய ஆக்கந் தரும்.

    மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

    To those who prize not state that kings are wont to prize,
    The king himself abundant wealth supplies.


    Explanation: For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.


    693 - போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது.

    தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

    Who would walk warily, let him of greater faults beware;
    To clear suspicions once aroused is an achievement rare.


    Explanation: Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.


    694 - செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து.

    ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

    All whispered words and interchange of smiles repress,
    In presence of the men who kingly power possess.


    Explanation: While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.


    695 - எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்காற் கேட்க மறை.

    பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    Seek not, ask not, the secret of the king to hear;
    But if he lets the matter forth, give ear!


    Explanation: (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).


    696 - குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்.

    ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

    Knowing the signs, waiting for fitting time, with courteous care,
    Things not displeasing, needful things, declare.


    Explanation: Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.


    697 - வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.

    விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

    Speak pleasant things, but never utter idle word;
    Not though by monarch's ears with pleasure heard.


    Explanation: Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).


    698 - இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோ டொழுகப் படும்.

    எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
    But reverence the glory kingly state doth bring.


    Explanation: Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".


    699 - கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்.

    ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

    'We've gained his grace, boots nought what graceless acts we do',
    So deem not sages who the changeless vision view.


    Explanation: Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".


    700 - பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும்.

    நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

    Who think 'We're ancient friends' and do unseemly things;
    To these familiarity sure ruin brings.


திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: குறிப்பறிதல்

Thirukural - Chapter 71

701 - கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி.

    ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

    Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
    Of earth round traversed by the changeless sea.


    Explanation: The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.


    702 - ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்.

    ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

    Undoubting, who the minds of men can scan,
    As deity regard that gifted man.


    Explanation: He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).


    703 - குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்.

    ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

    Who by the sign the signs interprets plain,
    Give any member up his aid to gain.


    Explanation: The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.


    704 - குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு.

    உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

    Who reads what's shown by signs, though words unspoken be,
    In form may seem as other men, in function nobler far is he.


    Explanation: Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).


    705 - குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்.

    ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?

    By sign who knows not sings to comprehend, what gain,
    'Mid all his members, from his eyes does he obtain?


    Explanation: Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.


    706 - அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்.

    கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

    As forms around in crystal mirrored clear we find,
    The face will show what's throbbing in the mind.


    Explanation: As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.


    707 - முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்.

    உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

    Than speaking countenance hath aught more prescient skill?
    Rejoice or burn with rage, 'tis the first herald still!


    Explanation: Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.


    708 - முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்.

    அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

    To see the face is quite enough, in presence brought,
    When men can look within and know the lurking thought.


    Explanation: If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.


    709 - பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்.

    பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

    The eye speaks out the hate or friendly soul of man;
    To those who know the eye's swift varying moods to scan.


    Explanation: If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.


    710 - நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
    கண்ணல்ல தில்லை பிற.

    நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

    The men of keen discerning soul no other test apply
    (When you their secret ask) than man's revealing eye.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: அவை அறிதல்

Thirukural - Chapter 72

711 - அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.

    ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

    Men pure in heart, who know of words the varied force,
    Should to their audience known adapt their well-arranged discourse.


    Explanation: Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).


    712 - இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.

    சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

    Good men to whom the arts of eloquence are known,
    Should seek occasion meet, and say what well they've made their own.


    Explanation: Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).


    713 - அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.

    அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

    Unversed in councils, who essays to speak.
    Knows not the way of suasive words,- and all is weak.


    Explanation: Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).


    714 - ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல்.

    அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

    Before the bright ones shine as doth the light!
    Before the dull ones be as purest stucco white!


    Explanation: Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.


    715 - நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.

    அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

    Midst all good things the best is modest grace,
    That speaks not first before the elders' face.


    Explanation: The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.


    716 - ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

    அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

    As in the way one tottering falls, is slip before
    The men whose minds are filled with varied lore.


    Explanation: (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).


    717 - கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.

    மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

    The learning of the learned sage shines bright
    To those whose faultless skill can value it aright.


    Explanation: The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.


    718 - உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

    உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

    To speak where understanding hearers you obtain,
    Is sprinkling water on the fields of growing grain!


    Explanation: Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).


    719 - புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்.

    நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

    In councils of the good, who speak good things with penetrating power,
    In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.


    Explanation: Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.


    720 - அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
    அல்லார்முன் கோட்டி கொளல்.

    அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

    Ambrosia in the sewer spilt, is word
    Spoken in presence of the alien herd.

திருக்குறள் :: பொருட்பால் :: அமைச்சியல் :: அவையஞ்சாமை

Thirukural - Chapter 73

721 - வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.

    சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

    Men, pure in heart, who know of words the varied force,
    The mighty council's moods discern, nor fail in their discourse.


    Explanation: The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.


    722 - கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.

    கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.

    Who what they've learned, in penetrating words heve learned to say,
    Before the learn'd among the learn'd most learn'd are they.


    Explanation: Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.


    723 - பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத் தஞ்சா தவர்.

    அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

    Many encountering death in face of foe will hold their ground;
    Who speak undaunted in the council hall are rarely found.


    Explanation: Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).


    724 - கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.

    அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    What you have learned, in penetrating words speak out before
    The learn'd; but learn what men more learn'd can teach you more.


    Explanation: (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).


    725 - ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

    அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

    By rule, to dialectic art your mind apply,
    That in the council fearless you may make an apt reply.


    Explanation: In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).


    726 - வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

    கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

    To those who lack the hero's eye what can the sword avail?
    Or science what, to those before the council keen who quail?


    Explanation: What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?


    727 - பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல்.

    அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

    As shining sword before the foe which 'sexless being' bears,
    Is science learned by him the council's face who fears.


    Explanation: The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.


    728 - பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.

    அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

    Though many things they've learned, yet useless are they all,
    To man who cannot well and strongly speak in council hall.


    Explanation: Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.


    729 - கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்.

    ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

    Who, though they've learned, before the council of the good men quake,
    Than men unlearn'd a lower place must take.


    Explanation: They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.


    730 - உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.

    தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

    Who what they've learned, in penetrating words know not to say,
    The council fearing, though they live, as dead are they.

திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: நாடு

Thirukural - Chapter 74

731 - தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வருஞ் சேர்வது நாடு.

    செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

    Where spreads fertility unfailing, where resides a band,
    Of virtuous men, and those of ample wealth, call that a 'land'


    Explanation: A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.


    732 - பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.

    பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

    That is a 'land' which men desire for wealth's abundant share,
    Yielding rich increase, where calamities are rare.


    Explanation: A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.


    733 - பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
    கிறையொருங்கு நேர்வது நாடு.

    புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

    When burthens press, it bears; Yet, With unfailing hand
    To king due tribute pays: that is the 'land'


    Explanation: A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.


    734 - உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு.

    பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

    That is a 'land' whose peaceful annals know,
    Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.


    Explanation: A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.


    735 - பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு.

    பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.

    From factions free, and desolating civil strife, and band
    Of lurking murderers that king afflict, that is the 'land'.


    Explanation: A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.


    736 - கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.

    எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.

    Chief of all lands is that, where nought disturbs its peace;
    Or, if invaders come, still yields its rich increase.


    Explanation: The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.


    737 - இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு.

    ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

    Waters from rains and springs, a mountain near, and waters thence;
    These make a land, with fortress' sure defence.


    Explanation: The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.


    738 - பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

    மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.

    A country's jewels are these five: unfailing health,
    Fertility, and joy, a sure defence, and wealth.


    Explanation: Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.


    739 - நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.

    இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

    That is a land that yields increase unsought,
    That is no land whose gifts with toil are bought.


    Explanation: The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.


    740 - ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.

    நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.

    Though blest with all these varied gifts' increase,
    A land gains nought that is not with its king at peace.

திருக்குறள் :: பொருட்பால் :: அங்கவியல் :: அரண்

Thirukural - Chapter 75

741 - ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.

    பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

    A fort is wealth to those who act against their foes;
    Is wealth to them who, fearing, guard themselves from woes.


    Explanation: A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.


    742 - மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்.

    ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

    A fort is that which owns fount of waters crystal clear,
    An open space, a hill, and shade of beauteous forest near.


    Explanation: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.


    743 - உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்.

    உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

    Height, breadth, strength, difficult access:
    Science declares a fort must these possess.


    Explanation: The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.


    744 - சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.

    உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

    A fort must need but slight defence, yet ample be,
    Defying all the foeman's energy.


    Explanation: A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.


    745 - கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீர தரண்.

    முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

    Impregnable, containing ample stores of food,
    A fort for those within, must be a warlike station good.


    Explanation: A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.


    746 - எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
    நல்லா ளுடைய தரண்.

    போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

    A fort, with all munitions amply stored,
    In time of need should good reserves afford.


    Explanation: A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).


    747 - முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரிய தரண்.

    முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

    A fort should be impregnable to foes who gird it round,
    Or aim there darts from far, or mine beneath the ground.


    Explanation: A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.


    748 - முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வ தரண்.

    முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

    Howe'er the circling foe may strive access to win,
    A fort should give the victory to those who guard within.


    Explanation: That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.


    749 - முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.

    போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

    At outset of the strife a fort should foes dismay;
    And greatness gain by deeds in every glorious day.


    Explanation: A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.


    750 - எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்ல தரண்.

    கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

    Howe'er majestic castled walls may rise,
    To craven souls no fortress strength supplies.

No comments:

Post a Comment